முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் ஒப்பந்தம் ஆன முதல் இந்திய வீராங்கனை ஆனார் கவிதா தேவி

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      விளையாட்டு
Image Unavailable

வாஷிங்டன் : பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கவிதா தேவி என்ற வீராங்கனை முதன்முறையாக உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் ஒப்பந்தமான இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

உலக அளவில் மிகவும் பிரபலமானது உலக மல்யுத்த பொழுதுபோக்கு . இந்த போட்டிக்கு அதிக அளவில் குழந்தைகள் ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த கிரேட் காலி, ஜிந்தர் மாஹல் ஆகியோர் உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் களம் இறங்கி சாதித்தவர்கள.

தற்போது பஞ்சாப்பை சேர்ந்த கவிதா தேவி என்ற வீராங்கனை உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிரேட் காலியின் பயிற்சி அகாடமியில் பயிற்சி எடுத்தவர். இந்தியாவில் உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் தொடர் வருகிற டிசம்பர் மாதம் 8-ந்தேதி மற்றும் 9-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் கவிதா தேவி களம் இறங்க உள்ளார்.

கவிதா தேவி தனது சக மல்யுத்த வீராங்கனையுடன் மோதிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாகியது. இதனைத்தொடர்ந்து துபாயில் நடைபெற்ற மயி யங் டோர்னமென்ட் தொடரில் விளையாட அழைக்கப்பட்டார். இந்த தொடரில் டகோடா காய் என்பவருக்கு எதிராக தோல்வியடைந்தாலும், சிறப்பாக சண்டையிட்டதால் உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புளோரிடாவின் ஒர்லாண்டோவில் உள்ள உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் பெர்மான்மன்ஸ் சென்டரில் கடந்த ஜனவரி முதல் பயிற்சி எடுத்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து