முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      விளையாட்டு
Image Unavailable

கோபன்ஹேகன் : இன்று தொடங்க இருக்கும் டென்மார்க் ஓபன் பேட்மிட்டண் தொடரில் இந்தியாவின் வெற்றி பி.வி. சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரையும் நம்பி உள்ளது.

டென்மார்க் ஓபன் பேட்மிட்டண் தொடர் இன்று தொடங்க உள்ளது. இத்தொடரில் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் காமன்வெல்த் சாம்பியன் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகிய இருவரையும் இந்தியா அதிக அளவில் நம்பி உள்ளது. ஜப்பான் ஓபன் தோல்விக்கு பின் பி.வி.சிந்து 3 வார பயிற்சியில் ஈடுபட்டார். டென்மார்க் ஓபனில் சீனாவின் சென் யூபியை முதல் சுற்றில் எதிர் கொள்கிறார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தனது இரண்டு வெற்றிக்குப் பின் இந்த தொடரில் விளையாடுகிறார். இவர் முதல் இரண்டு சுற்றில் வெற்றி பெற்றால் கால் இறுதிச்சுற்றில் விக்டர் அக்செல்சனை எதிர்கொள்கிறார்.  பிரனாய் மற்றும் பிரனீத் முதல் சுற்றில் டென்மார்க்கின் ஐரினா எமில் கால்ஸ்ட் மற்றும் கன்ஸ் கிரிஷ்டனை சந்திக்கின்றனர். சமீர் வர்மா இரண்டாவது சுற்றில் அக்செல்சனுடன் மோதுகிறார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அத்ரி, பி. சுமீத் ரெட்டி, சத்விக்சாய்ராஜ் ரங்கீரெட்டி மற்றும் சிராங் ஷெட்டி ஆகியோர் பங்கேற்கின்றனர். இன்று நடைபெறும் முதலாவது சுற்று ஆட்டத்தில் காமன்வெல்த் சாம்பியனான இந்திய வீரர் காஷ்யப், டென்மார்க்கின் விக்டர் சுவெண்ட்செனை எதிர்கொள்கிறார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா மற்றும் என்.சிக்கி ரெட்டி விளையாடுகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அனுரா பிரபுதேசாய் டென்மார்க்கின் அமலி ஆண்டர்சனை எதிர்கொள்கிறார். கலப்பு இரட்டையர் பிரிவில் பிரனவ்-சிக்கி ரெட்டி ஆகியோரும் இந்தியா சார்பில் களம் காண்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து