முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்ஸ் கடலில் இந்திய மாலுமிகளைத் தேடும் பணி 5-வது நாளாக தொடர்கிறது

செவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

மணிலா, பிலிப்பைன்ஸ் கடலில் மாயமான இந்திய மாலுமிகளைத் தேடும் பணி 5-வது நாளாக தொடர்கிறது.
பிலிப்பைன்ஸ் அருகே கடந்த வெள்ளிக்கிழமை அன்று சரக்குக் கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்தது. எம்.வி. எமரால்ட் ஸ்டார் என்ற இந்தக் கப்பலில் 26 பேர் இருந்தனர். இவர்களில் 10 மாலுமிகளைக் காணவில்லை. கப்பலில் இருந்த 26 பேரில்  உசிலம்பட்டி வாலிபர் கெளதம் உட்பட பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாயமான மாலுமிகளைத் தேடும் பணியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான பி-81 கப்பலும் ஜப்பானிய கடலோர காவற்படைக் கப்பலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மாலுமிகளைத் தேடும் பணி குறித்து எம்.வி. எமரால்ட் ஸ்டார் கப்பலின் உரிமை நிறுவனமான விரிதி மேரிடைம் பிரைவேட் லிமிடெட்டின் செய்தித்தொடர்பாளர், "காணாமல் போனவர்களைப் பற்றி இன்னும் எங்களுக்கு எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து