முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகள் ஆருஷி கொலை வழக்கில் சிறையில் இருந்து தல்வார் தம்பதி விடுவிப்பு

செவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

நொய்டா, மகள் ஆருஷி கொலை வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தல்வார் தம்பதியினர் நேற்று சிறையில் இருந்து வெளியில் வந்தனர்.

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் வசிப்பவர்கள் ராஜேஷ் தல்வார், நுபர் தல்வார். இருவரும் பல் மருத்துவர்கள். கடந்த 2008 மே 16-ம் தேதி இவர்களது 14 வயது மகள் ஆருஷி வீட்டில் கொலை செய்யப்பட்டாள். வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜும் மாடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த வழக்கில் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் ஆருஷி பெற்றோர் ராஜேஷ் - நுபுர் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து தஸ்னா சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். இந்நிலையில், தல்வார் தம்பதி கொலை செய்ததற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் அவர்களை கடந்த 12-ம் தேதி விடுதலை செய்தது.

இதையடுத்து தல்வார் தம்பதியினர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மாலை 5 மணிக்கு சிறையில் இருந்து வெளியில் வந்தனர். பின்னர் அவர்கள் நொய்டாவின் ஜல்வாயு விஹார் பகுதியில் உள்ள இல்லத்துக்கு சென்றனர். போலீஸாரும் பாதுகாப்புக்கு அவர்களுடன் சென்றனர். அந்த வீட்டில்தான் ஆருஷி, ஹேம்ராஜ் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

தல்வார் தம்பதி சிறையில் இருந்து வெளிவருவதை புகைப்படம் எடுக்க ஏராளமான ஊடக கேமராமேன்கள் அங்கு குவிந்திருந்தனர். அவர்களிடம், தல்வார் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அகமது மிர் கூறியபோது, ‘‘தல்வார் தம்பதிக்கு எதிராக சதி நடந்தது. இனிமேலாவது அவர்களை அமைதியாக வாழ விடுங்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

பணம் வாங்க மறுப்பு

சிறையில் இருந்த போது கைதிகள், போலீஸாருக்கு தல்வார் தம்பதியினர் பல் சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த 2013-ம் ஆண்டு முதல் அவர்கள் சிகிச்சை அளித்து வந்ததற்கு ரூ.49,500 வழங்கப்பட்டது. ஆனால், அந்தப் பணத்தை வாங்க தல்வார் தம்பதியினர் மறுத்துவிட்டனர் என்று சிறை கண்காணிப்பாளர் தாதிராம் மவுரியா நேற்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து