முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நமக்குத் தெரியாமல் நாட்டின் பெயரைக் கூட பா.ஜ.க மாற்றிவிடும் : மம்தா பானர்ஜி காட்டம்

செவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா :  நாட்டின் பெயரைக் கூட பா.ஜ.கவினர் நமக்குத் தெரியாமல் மாற்றிவிடுவார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தாஜ் மஹால் நமது இந்திய வரலாற்றில் ஒரு கறை' என்று பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் கருத்து தெரிவித்து இருந்தார். இதுபற்றி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அளித்த பதில்:

இது ஏதோ ஒரு எம்.எல்.ஏ.வின் தனிப்பட்ட கருத்து அல்ல. இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் கொள்கை. தற்போது அது வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு நாட்டின் நினைவுச் சின்னத்தை எப்படி மதத்தின் பெயரால் அந்த நாட்டின் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியும். மிகவும் தவறான பாதையில் பா.ஜ.க பயணிக்கிறது. இங்கு நடப்பது சர்வாதிகார ஆட்சி. பலதரப்பட்ட மக்கள் தங்கள் வேற்றுமைகளைக் கடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நாட்டில் தற்போது இந்தக் கருத்து தேவையற்றது. இதுபோன்று கருத்து தெரிவிப்பவர்களை நாம் விலக்கி வைக்கவேண்டும். கூடிய விரைவில் நமக்குத் தெரியாமல் நமது நாட்டின் பெயரைக் கூட இந்த ஆட்சியாளர்கள் மாற்றிவிடுவார்கள். நாட்டின் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் இவர்கள் பிரச்னையை தூண்டிவிடுகிறார்கள். இவ்வாறு மமதா கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து