முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க 46-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை - ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க.வின் 46-வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று எளியமுறையில் கொண்டாடப்பட்டது. அங்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அ.தி.மு.க. கொடியேற்றி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மலர் தூவியும் மரியாதை

அ.தி.மு.க.வின் 46-வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 10 மணிக்கு கட்சி அலுலகத்திற்கு வந்தார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைத்தொடர்ந்து 10.40 மணிக்கு முதல்வரும் அ.தி.மு.க. இணை ஓருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வந்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்தின் முன்பு உள்ள கட்சிக்கொடியை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீ்ர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஏற்றி வைத்தனர். இதன் பின்னர் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த,மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

அமைச்சர்கள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, சி.விஜயபாஸ்கர் கடம்பூர் ராஜூ, செல்லூர் கே.ராஜி, உதயகுமார், பெஞ்சமின், எம்.சி.சம்பத், மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி.எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிவபதி,  மகளிர் அணி, விவசாயப் பிரிவு,செயலாளர் வைரமுத்து, மீனவர் பிரிவு செயலாளர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி, இலக்கிய அணி,செயலாளர் வளர்மதி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிசெயலாளர் கமலக்கண்ணன், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் குமார், எம்.பி. தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர் சிவராஜ், பொம்மி, உட்பட அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து