முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனில் கும்பிளேவின் 47 வது பிறந்த நாள் - கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு : அனில் கும்பிளேவின் 47 வது பிறந்த நாளையொட்டி அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவரும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்பிளே நேற்று தனது 47 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.  இதையடுத்து, அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சச்சின் தெண்டுல்கர், ஹர்பஜன்சிங், விவிஎஸ் லஷ்மன், சேவாக், சுரேஷ் ரெய்னா, ஆகாஷ் சோப்ரா, முகம்மது கைப், அனுராக் தாகூர், உள்ளிட்ட பிரபலங்கள் டுவிட்டர் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

வாழ்த்தை நீக்கிய இந்திய கிரிக்கெட் வாரியம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் ஒரு ஆண்டுகளாக இருந்தார். அவரது தலைமையில் இந்திய அணி உள்ளூரில் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அதில் 10–ல் வெற்றியும், 2–ல் டிராவும் கண்டது. ஒன்றில் மட்டுமே தோற்றது. அது மட்டுமின்றி டெஸ்டில் ‘நம்பர் ஒன்’ அரியணையிலும் ஏறியது. நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது

இதனால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.  இந்த நிலையில் கும்ளே நேற்று தனது 47 வது பிறந்த  நாளில் அடியெடுத்து வைக்கிறார். இதற்காக  அவரது பல்லாயிரகணக்கான ரசிகர்களும் அவரது ஆதரவாளர்களும் கிரிக்கெட் நண்பர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ட்விட்டரில் அனில் கும்ளேக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு பின்னர் அது நீக்கப்பட்டது. இது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து