முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரப்பலாறு அணையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு தண்ணீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் மகிழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்.-  ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பரப்பலாறு அணையில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மழையின் அதிகம் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
 திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், வடகாடு மலைப்பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலையில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மில்லியன் கன அடி ஆகும். இதன் மூலம் தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர் ராமசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய ஆறு குளங்கள் பாசன வசதி பெறுகிறது. பரப்பலாறு அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2034 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 289 ஏக்கர் நிலங்களும்; நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. சத்திரப்பட்டி, விருப்பாட்சி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு அணை உள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர்  11-ந் தேதி அணையின் நீர் மட்டம் 47.84 ஆகும். மொத்த கொள்ளளவு 8.3 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. தண்ணீர் வரத்து இல்லை;. குடிநீருக்காக 5 கன அடி தண்ணீர் வெளிறே;றப்பட்டது. தற்போது அணையில் தண்ணீர் மட்டம் 68 அடி உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 58.460 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. பரப்பலாறு அணைக்கு 10 கன அடி தண்ணீர் வரத்து வந்துகொண்டுள்ளது. குடிநீர் தேவைக்காக 3 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பரப்பலாறு அணையை உதவி செயற்பொறியாளர் மெய்யழகன், செயற்பொறியாளர் சுப்பிரமணி, இளநிலை பொறியாளர் தனசேகரன் ஆகியோர் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து