முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா- அமெரிக்க நட்புறவு என்பது அடுத்த நூறு ஆண்டுகளுக்கு உலகை நிலைநிறுத்தும் திறன் கொண்டது அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் பேச்சு

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையேயான திட்டமிடப்பட்ட நட்புறவு என்பது அடுத்த நூறு ஆண்டுகளுக்கு உலகை நிலைநிறுத்தும் திறன் கொண்டது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அடுத்த வாரம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார்.

இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் குறித்தான அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அவர் கூறியிருப்பதாவது, “தெற்காசியாவை உறுதிப்படுத்துவதற்கான அமெரிக்காவின் கொள்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

வளர்ந்து வரும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையான திட்டமிடப்பட்ட நட்புறவு என்பது அடுத்த நூறு ஆண்டுகளுக்கு உலகை நிலைநிறுத்தும் திறன் கொண்டது. அமெரிக்காவும் இந்தியாவும் உலகின் இரு பக்கங்களிலுள்ள ஸ்திரத்தன்மை வாய்ந்த இரு புத்தகங்கள்.

நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றி, அவற்றின் எல்லைப் பிரச்சினைகளில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை குறைக்க விரும்புகிறோம். ஆப்கானிஸ்தான் வளர்ச்சியில் இந்தியா அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது.

பாகிஸ்தான் அதன் நாட்டு மக்களிடம் மற்றும் அதன் பிராந்தியத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவ்வாறு செய்தால் மட்டுமே பாகிஸ்தான் அதன் அண்டை நாடுகளுடன் சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.

தென் சீனக் கடலில் சர்வதேச விதிகளை மீறிய சீனாவின் நடவடிக்கைகள் ஆத்திரமூட்டும் வகையில் இருந்தன. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு உள்ளன.

சீனா ஒருபக்கமும் இந்தியா ஒருபக்கமும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இரு நாடுகளும் தங்களுக்குரிய சரியான இடத்தை ஏடுத்துக் கொண்டுவிட்டன. நாங்கள் சீனாவுடன் நட்புறவை வைத்துள்ளோம் ஆனால் அது இந்தியாவுடன் நாங்கள் வைத்துள்ள நட்புறவைப் போன்றது அல்ல.

உலகின் மனசாட்சியாக இந்தியா இருந்து வருகிறது. அவ்வாறு செயல்பட்ட முதல் நாடும் இந்தியாதான். ஜனநாயகக் கோட்பாடுகளில் இந்தியாவின் தாக்கம் அமெரிக்காவுக்கும் ஏற்பட இதுவே முக்கிய காரணம்" என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து