முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்நேரமும் அணு ஆயுத போர் மூளும் வாய்புள்ளது: வடகொரியா துணை தூதர் கிம் இன்-ரியாங் பேச்சு

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

ஐ.நா. : எந்நேரத்திலும் அணு ஆயுத போர் மூளும் வாய்ப்புள்ளது என்று வடகொரியா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.

ஐ.நா. சபை எச்சரிக்கையை மீறி அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இதன்காரணமாக அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் பதற்றம் நீடிக்கிறது.

இந்தப் பின்னணியில் ஐ.நா. பொது சபையின் அணு ஆயுத ஒழிப்பு கமிட்டி கூட்டத்தில் வடகொரிய துணை தூதர் கிம் இன்-ரியாங் பேசியதாவது: கடந்த 1970-ம் ஆண்டு முதல் அமெரிக்காவினால் எங்கள் நாட்டுக்கு அணு ஆயுத அச்சுறுத்தல் நிலவுகிறது. உலகில் வேறு எந்தவொரு நாட்டுக்கும் இத்தகைய அச்சுறுத்தல் இல்லை. எனவே எங்களின் தற்காப்புக்காக அணு ஆயுதங்களை வைத்திருக்கிறோம். இது எங்களின் உரிமை.

ஒவ்வொரு ஆண்டும் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. எங்கள் அதிபரை ஆட்சியில் இருந்து அகற்ற திரைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

எனவே அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அணு குண்டு, ஹைட்ரஜன் குண்டு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரித்து தயார் நிலையில் வைத்துள்ளோம். எங்களால் அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்க முடியும். எங்கள் எல்லைக்குள் அமெரிக்கா ஓர் அங்குலம் முன்னேறினால்கூட நாங்கள் வழங்கும் தண்டனையில் இருந்து அந்த நாடு தப்ப முடியாது. இப்போதைய சூழ்நிலையில் எந்நேரத்திலும் அணு ஆயுத போர் மூளும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

வடகொரியா முதல் குண்டை வீசும்வரை போரை தவிர்க்க அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். அதேநேரம் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை, அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது மட்டுமே சரியான தீர்வு என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவ்வப்போது ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து