முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோயில் புதிய மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு புனிதத் தலமாக அறிவிக்க முதல்வர் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

சபரி: சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக திருச்சூரைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தியாக அனீஷ் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்.

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. நேற்று முதல் 21-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள், தினமும் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கிறது. சபரிமலை கோயில் மற்றும் மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தி தேர்வு குலுக்கல் மூலம் நடந்தது.

இதில் சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக திருச்சூர் மாவட்டம் சாலக்குடியைச் சேர்ந்த ஏ.வி.உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தியாக கொல்லம் மாவட்டம் மைனாகபள்ளியைச் சேர்ந்த அனீஷ் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கார்த்திகை மாதம் 1-ம் தேதி புதிய மேல்சாந்திகளாக பொறுப்பேற்க உள்ளனர். அடுத்த ஒரு வருடம்வரை இவர்கள் மேல்சாந்தி பொறுப்பில் இருப்பார்கள்.

சபரிமலையில் பினராயி விஜயன்
இதனிடையே, சபரிமலை கோயிலில் மண்டல காலம் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மண்டல கால பூஜை ஏற்பாடுகள் குறித்து சபரி மலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதற்காக நேற்று முன்தினம் இரவு பினராயி விஜயன் சபரிமலை சென்றார். 8 கி.மீ. தூரம் மலைப்பாதையில் நடந்து சென்று சன்னிதானத்தை அடைந்தார். இரவு அங்கேயே தங்கினார். நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கேரள தேவசம் வாரிய அமைச்சர் சுரேந்திரன், திருவிதாங்கூர் தேவசம் வாரிய தலைவர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதல் முறையாக சபரிமலை வந்தது குறிப்பிடத்தக்கது.

சபரிமலையில் நேற்று பேட்டியளித்த பினராயி விஜயன், ‘‘புகழ் பெற்ற சபரிமலை கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை கோயிலை தேசிய புனித தல மையமாக அறிவிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். பம்பை அருகே எருமேலியில் விமான நிலையம் அமைப்பதற்கான தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மாநில அரசு நிறைவு செய்துவிட்டது. ஒன்றரை மணி நேரம் மலைப்பாதையில் நடந்து சபரிமலையை அடைந்தேன். ஒன்றும் சிரமம் தெரியவில்லை. இது ஒரு நல்ல அனுபவம்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து