காட்டாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையம்: தி.மலை கலெக்டர் கந்தசாமி திடீர் ஆய்வு

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      திருவண்ணாமலை
photo04

திருவண்ணாமலை ஒன்றியத்துக்குட்பட்ட காட்டாம்பூண்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

அப்போது புறநோயாளிகள் பிரிவு (ஆண்கள்) சிகிச்சை பெற வரும் நோயாளிகள் வருகை பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் ஆரம்ப சுகாதார வளாகத்திலுள்ள செவிலியர் மற்றும் மருத்துவர்கள் குடியிருப்பு பகுதிகளையும், குடும்ப நல அறுவை அரங்கத்தையும் பார்வையிட்ட அவர் வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரியிடம் காட்டாம்பூண்டி, சு.பாப்பம்பாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றவர்களின் விவரங்களையும், மருத்துவமனை அடிப்படை வசதிகளையும் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து மருத்துவ அதிகாரிகளிடம் டெங்கு காய்ச்சல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கிராமப்புற பகுதிகளில் விரிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது மருத்துவ அலுவலர்கள் டாக்டர் அருண்குமார், செல்வகணபதி, தாசில்தார் ஆர்.ரவி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வெ.புருஷோத்குமார், தனி அலுவலர் பெ.கருணாகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.ராஜேந்திரகுமார், ஊராட்சி செயலர் பி.லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து