முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள்: அரசு முதன்மைச் செயலாளர்.ஜெ.ராதாகிருஷ்ணன், நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளை தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், நேரில் சென்று பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்விற்கு கலெக்டர் கே.விவேகானந்தன்,முன்னிலை வகித்தார்.

 

அரசு செயலாளர் ஆய்வு

 

பின்னர் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், செய்தியாளாகளிடம் தெரிவித்ததாவது :-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு ஒழிப்புப்பணி முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. டெங்கு காய்ச்சலை ஒழிப்பதில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் அரசிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தற்போது உலக சுகதார நிறுவனத்தின் வழிக்காட்டுதல்படி டெங்கு பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையில் நிலவேம்பு குடிநீர் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் 12 நிலவேம்பு இரதம் இயக்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறை கட்டடங்கள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் டெங்கு பரப்பும் ஏ.டி.எஸ் கொசுப்புழுக்களை ஒழிக்க தொடர்புடைய துறைகள் மற்றும் நிறுவனங்கள் முழு வீச்சில் ஈடுபடவேண்டும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் பொதுமக்கள் தண்ணீர் தேக்கிவைக்க புளு நிற பிளாஸ்டிக் ட்ரம்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இது முறையாக பயன்படுத்தாத காரணத்தினால் இதில் உள்ள தண்ணீரில் கொசுப்புழுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இந்த ட்ரம்களில் உள்ள தண்ணீரை சரியான முறையில் மூடிவைத்தும், அவ்வப்போது தண்ணீரை மாற்றியும் பயன்படுத்த வேண்டும். டெங்குவை ஒழிப்பதற்கு போதிய விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். மேலும் நகர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் புதிய கட்டடப்பணிகள் நடைபெறும் இடங்களில் தேக்கிவைக்கப்படும் தண்ணீரிலும் கொசுப்புழுக்கள் உருவாகிறது. இதை நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையை பொருத்தமட்டில் அரசு மருத்துவனைகள், இந்திய மருத்துவக் கழகம், இந்திய குழந்தைகள் மருத்துவக் கழகம், இந்திய மருத்துவம், சித்தா மருத்துவம் உள்ளிட்டவைகள் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான இரத்தம் அரசு மருத்துவ மனைகளில் இருப்பில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் மற்றும் மருத்துவப்பணிகளின் இணை மற்றும் துணை இயக்குநர் ஆகியோருக்கு பொதுமக்கள் போலிமருத்துவர்கள் குறித்து உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.

பொதுமக்கள் எக்காரணத்தைகொண்டும் போலி மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு செல்லக்கூடாது. வலி மாத்திரைகள் டெங்கு காய்ச்சலுக்கு உகந்தது அல்ல. தரமான மூத்த மருத்துவர்களிடம் சென்று தங்களுக்கு உள்ள காய்ச்சல் வகையை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவர் அலோசனையின்றி தனியாக மருந்தகங்களில் மாத்திரைகளை பெற்று சாப்பிடக்கூடாது. தேசிய வழிகாட்டு முறைகள்படி போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு காய்ச்சல் 1945 ஆண்டு ஆப்பரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டது. 1956 ஆம் ஆண்டு வேலூர் பகுதியில் டெங்குகாய்ச்சல் அறிப்பட்டது. 19 டிகிரி முதல் 49 டிகிரி வரை வெப்பமுள்ள 128க்கும் அதிகமாக நாடுகளில் டெங்கு காய்ச்சல் உள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு முக்கிய காரணம் நமது வாழ்வாதார வழிமுறைகள், பருவநில மாற்றங்கள். நல்லதண்ணீரில் உருவாகும் கொசுக்கள் மூலம் மட்டுமே டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இந்த ஆண்டு கேரளாவில் முதலில் டெங்கு காய்ச்சல் தொடங்கியது. டெங்கு காய்ச்சலால் ஏற்படும் இழப்புகள் சமூதாயத்திற்கே ஏற்படும் இழப்புகளாக கருதப்படுகிறது. இதை தடுக்க முறையான மருத்துவர்களின் கண்காணிப்பில் டெங்கு நோயாளிகள் சிகிச்சை பெற வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுத்தல்படி, பொதுமக்கள், தொண்டுநிறுவனங்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி மன்றங்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்தது செயல்பட்டால்தான் டெங்குவை முழுமையாக ஒழிக்க முடியும். தடுப்பு மருந்து இருப்பதால் போலியோ நோயை நம்மால் ஒழிக்க முடிந்தது. டெங்குவிற்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த டெங்குவை ஒழிப்பதற்கு நல்லதண்ணீரில் வரும் கொசுவை ஒழிப்பதுதான் நிரந்தர தீர்வாக அமையும். நிலவேம்பு குறித்து தேவையற்ற வதந்திகள் வாட்ஸ்அப்பில் பரப்பப்படுகிறது. நிலவேம்பு அங்கீரகிக்ப்பட்ட ஒரு இந்திய மருத்துவம். பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின்புதான் சித்த மருத்துவர்களின் அறிவுரைப்படிதான் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு குறித்து 40க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் உள்ளது. சந்தேசம் ஏற்படும் நபர்களுக்கு இந்த முடிவுகளை வழங்க அரசு தயராக உள்ளது என தெரிவித்தார்.

முன்னதாக காரிமங்கலம் அரசு மருத்துவமனை, காரிமங்கலம் பி.கெட்டூர் துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். தொடர்ந்து பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சென்று காய்ச்சல் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது மருத்துவர்களிடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி நல்ல தரமான சிகிச்சையை வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

கலெக்டர் கே.விவேகானந்தன்,இ.ஆ.ப., தெரிவித்தாவது:-

தருமபுரி மாவட்டத்தில் 32 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் தலா 100 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் முழு சுகாதாப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ரூ 1.95 கோடி மதிப்பில் மகப்பேறு மருத்துவமனை அமைக்க அரசு செயலாளர் ஆய்வு செய்து நிதிஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ளார்கள். மேலும் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை முழுமையாக அழிக்க தூய்மை பணியாளர்களை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சீனிவாசராஜு, இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பொன்னுராஜ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ஜெகதீஸ்குமார், வருவாய் கோட்டாட்சியர் இராமமூர்த்தி, மாவட்ட சித்த மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிருப்பு மருத்துவர் மரு.சுரபி, வட்டாட்சியர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து