முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டன்சத்திரம் அருகே பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம் - ஒரு நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, அதன் தொன்மை தெரிய வேண்டும் என்றால் அந்நாட்டின் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் கல்வெட்டுகள், செப்புபட்டயங்கள் மூலம் அறியப்படுகிறது. தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்த மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கட்டிய கோவில்கள் பொதுமக்களுக்கு தானமாக வழங்கிய நிலங்கள் பண்டைய ஆட்சி காலத்தில் மன்னர் காலத்தில் மன்னர்கள் நடத்திய சிறப்பான ஆட்சிமுறை, பொதுமக்களின் பழக்கவழக்கங்கள் ஆகியவை இன்றளவும் அறியப்படுகிறது, இன்றும் காஞ்சிபுரம்  மாவட்டம், உத்தரமெரூர் பகுதியில் கிடைத்த கல்வெட்டுகள் மூலம் தமிழர்கள் சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே குடவோலை முறையில் ஜனநாயக முறைப்படி தங்கள் ஆட்சி செய்யும் நல்ல ஆட்சியாளர்களை தேர்வு செய்து, உலகிற்கே முன்னோடியாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி தேர்வு செய்தது இன்றளவும் அரிக்காமேட்டு கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது. உலக நாடுகளிலேயே முதல் முறையாக குடவோலை முறையில் ஜனநாயகப்படி ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை பொதுமக்கள் தேர்ந்தெடுத்தது. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் என்பது பல்வேறு கல்வெட்டுகளிலிருந்து கிடைத்த ஆதாரங்களின்படி தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இதே போல் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், சத்திரப்பட்டி அருகே உள்ள தாசரிபட்டி கிராமத்தில் எத்திலான் கரடு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் சுமார் 3 அடி நீளம், 5 அடி அகலம் கொண்ட மிக பழமையான கல்வெட்டு மர்மநபர்களால் தூக்கி மலைப்பகுதியில் வீசப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கல்வெட்டின் இடது பகுதியில் சூலாயுதமும், வலது பக்கத்தில் கோடாரியும், உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. நடுவில் சக்கரமும், சக்கரத்தின் நடுவே நான்கு கட்டமும் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் ஒருசில எழுத்தக்கள் தமிழிலும், வேறு வகையான எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு எந்த ஆண்டு, யாரால் எழுதப்பட்டுள்ளது என தாசரிபட்டி பொதுமக்களுக்கு தெரியாத காரணத்தினால் ஒருசிலர் இக்கல்வெட்டு வந்ததிலிருந்து, இப்பகுதியில் போதியளவு மழையில்லை என இப்பகுதி பொதுமக்கள் சோகத்துடன் கூறுகின்றனர். இக்கல்வெட்டுகள் குறித்து, மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை ஆய்வு நடத்தினால் இக்கல்வெட்டு எதற்காக எழுதப்பட்டது, யாரால் எழுதப்பட்டது, எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது என தெரியவரும் என இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து