முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25-ம் தேதி தேனியில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் அடிக்கல்

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

தேனி: தேனி மாவட்டத்தில் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோல் நடும்; விழா நேற்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு ஓதுவார்கள் மந்திரங்கள் முழங்க தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு,  தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம், மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன்,  மற்றும் முக்கிய பிரமுகர்கள் பால் ஊற்றி பின்னர் கால்கோள் நடப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கூறும்போது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் உயரிய லட்சியத்தினையும், சிறப்பினையும் நினைவு கூறும் வகையில் தமிழகத்தில் மாவட்டம்தோறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் வரும் 5ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இவ்விழாவில் தமிழக முதல்வர் அவர்கள், அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவதுடன், அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் சாதனைகளை விளக்கும் வகையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என்றார்.

இவ்விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மகளிர் திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள்;, வருவாய் கோட்டாட்சியர்கள் கார்த்திகேயன், ஆனந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல்;, மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தங்கவேல்;, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிருஷ்ணவேனி;, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன்;, வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக்முகமது, முன்னாள் கம்பம் நகர்மன்ற தலைவர் சிவக்குமார், முன்னாள் கடமலை மயிலை ஊராட்சி ஒன்றிய தலைவர் முறுக்கோடை ராமர்,  முன்னாள் எம்.எல்.ஏக்கள், முத்துராமலிங்கம், ஆர்.டி.கணேசன், பெரியகுளம் நகர செயலாளர் என்.வி.ராதா, நகர துணை செயலாளர் அப்துல்சமது, முன்னாள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத்குமார், ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ்,  மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், கூட்டுறவு சங்க இயக்குநர் அன்பு, தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சந்தோஷம், அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ரெங்கநாதன், இயக்குநர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து