முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை, பாளையங்கோட்டை நொச்சிகுளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புரவு பணிகள்: கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி, பாளையங்கோட்டை நொச்சிகுளம் கிராம  பகுதியில் துப்புரவு பணிகள் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி,  அதிகாலையில் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

நோசசயீகுளம கயீராம பகுதியில் நடைபெற்று வரும் மெகா துப்புரவு பணிகள் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி,  பார்வையிட்டார். தொடர்ந்து, வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டிகள், டிரம்கள் உள்ளிட்டவைகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டுகிறதா என ஆய்வு செய்தார். டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களிடம் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக பணியாற்ற வேண்டுமென உத்தரவிட்டார். மேலும், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களில் கொசு புழு உற்பதியாகிறதா என்பதையும், கொசு ஒழிப்பு புகை மருந்து அடிப்பதையும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதி பொதுமக்களிடம் கலெக்டர்  டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர், கலெக்டர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-

கொசு ஒழிப்பு பணிகள்

தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை நாள்தோறும் அதிகாலை முதல் ஆய்வு செய்து வருகின்றனர். சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு மருந்து அடித்தல்,நீண்ட காலமாக தொட்டிகளில் பயன்படுத்த படாமல் இருக்கும் தண்ணீரை அப்புற படுத்தி தொட்டிகளை சுத்தம் செய்தல்,தேங்கி நீற்கும் தண்ணீரை அகற்றுதல் எந்த எந்த பகுதியில் டெங்கு வைரஸ் பாதிப்பு அதிகாமாக இருக்கிறதோ அப்பகுதியில் சுகாதார பணிகள் தூரித படுத்தி குப்பைகளை சுத்தம் செய்தல்,சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகளை தெரியபடுத்துதல் மற்றும் காய்ச்சிய குடி நீரை பருகுமாறு எடுத்துரைத்தல்,இந்த பணியில் அரசு அலுவலர்களுடன் பொது மக்களும் பங்கு பெற வேண்டும் என தெரிவித்து ஒவ்வொரு இடங்களிலும் முழு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இப்பணிகளில் 2000 பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு பல்வேறு பகுதிகளில் தீவிரமாக கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 10 தினங்களுக்குள் திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு கொசு கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.ஆய்வின் போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.செந்தில்குமார், வட்டாட்சியர் தங்கராஜ் ரெட்டியார்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் ஜஸ்டின், பாளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகதாய், அறுமுககனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து