முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்: பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்படுகிறது. இந்த  நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். ஸ்ரீநகரில் இருந்து 123 கி.மீ. தூரத்தில் குரூஸ் ராணுவ முகாம் உள்ளது. அங்கு சென்ற மோடி ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்பு வழங்கினார்.

புதிய சக்தி
பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, என்னுடைய குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட எனக்கு மிகவும் விருப்பம். ஆதலால், நான் என்னுடைய குடும்பமாக நினைக்கும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட வந்து உள்ளேன். எப்போது எல்லாம் பாதுகாப்பு படை வீரர்களுடன் நேரம் செலவிடுகின்றனோ அப்போது எல்லாம் எனக்கு புதிய சக்தி கிடைக்கிறது. கடுமையான நிலையில் பணிபுரியும் பாதுகாப்பு படை வீரர்களின் அர்பணிப்பு மற்றும் தியாகம் பாராட்டத்தக்கது.

யோகா பயிற்சி
ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் மத்திய அரசு ஆயுத படைகளுக்கு மேம்பாட்டை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ளது என்ற பிரதமர் மோடி, ராணுவத்தில் ஒரு பதவி ஒரே ஒய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தியதை சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் படை வீரர்கள் சிறப்பான யோகா ஆசிரியராகவும் ஆக முடியும். வீரர்கள் அனைவரும் யோகா பயிற்சியை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி பேசினார்.

2-வது தடவை
கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா தலைமையிலான ஆட்சி மலர்ந்து பிரதமரானதும், முதன் முறையாக மோடி இங்கு வந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். தற்போது 2-வது தடவையாக இங்கு வந்துள்ளார். 2015-ம் ஆண்டு பஞ்சாப்பில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். கடந்த ஆண்டு இமாசல பிரதேச எல்லையில் உள்ள ராணுவ நிலைகளுக்கு சென்றார். சீன எல்லையில் உள்ள சின்னாவூர் உள்ளிட்ட ராணுவம் மற்றும் திபெத் எல்லை போலீஸ் முகாம்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து