முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவிடமிருந்து விலகி இருங்கள்: ஆஸ்திரேலியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

பியாங்கியாங்: அமெரிக்காவிடமிருந்து ஆஸ்திரேலியா விலகி இருக்குமாறு அந்நாட்டுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா அரசு தரப்பில் தெரிவித்திருப்பதாவது, "வடகொரியாவிடமிருந்து ஒரு பக்கம் அளவில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் டிரம்பிடமிருந்து எங்களை தள்ளியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இந்தக் கடிதம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியபோது, "வடகொரியாவிடமிருந்து அனுப்பட்ட கடிதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் கொடூரமான மற்றும் பொறுப்பற்ற நகர்வுகளிருந்து ஆஸ்திரேயாவை விலகி இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.

ஆனால் எங்களைப் பொறுத்தவரை வடகொரியாதான் ஜப்பான், தென் கொரியா, அமெரிக்காவில் அணுஆயுத ஏவுகணை செலுத்துவோம் என்று பயத்தை உருவாக்கி ஒருவித பதற்றம் ஏற்படக் காரணமாக உள்ளது" என்றார்.

ஐ.நா. சபை எச்சரிக்கையையும் மீறி அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கொரிய தீபகற்பத்தில் தென்கொரிய கடற்படையும் அமெரிக்க கடற்படையும் இணைந்து தீவிர போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்கா எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வகையில் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து