முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோஹிங்கியா அகதிகளில் 58 சதவீதம் குழந்தைகள் :ஐ.நா.அறிக்கையில் தகவல்

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

ஐ.நா. : வங்கதேசத்துக்கு அகதிகளாக இடப்பெயர்ந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களில் 58 சதவீதத்தினர் குழந்தைகள் என்று ஐ.நாவின் புதிய அறிக்கை கூறியுள்ளது.

மேலும் அங்கு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகள் பலர் தொற்று நோய்களாலும், ஊட்டசத்துக் குறைபாடுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல சர்வதேச அமைப்பான யுனிசெஃப் கூறியுள்ளது.

இதுகுறித்து ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், "ரோஹிங்கிய குழந்தைகள் ஆபாயகரமான எதிர்காலத்தை எதிர் நோக்கியுள்ளனர். அவர்கள் ஏமாற்றம், வலி போன்ற விவரிக்க முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

வங்கதேசத்தில் அகதிகளாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 14,500 குழந்தைகள் தொற்று நோய்களாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் ராக்கைன் மாவட்டத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான நடந்த வன்முறைகள் குறைந்த அளவிலேயே எங்களுக்குத் தெரியும். கடந்த ஆகஸ்ட் மாத்திலிருந்து ராக்கைன் மாவட்டத்துக்குச் செல்ல ஐ.நாவின் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அனுமதிக்கப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் பவுத்தர்களுக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் வங்கதேசத்துக்கு இடம்பெயர்ந்தனர்.

இதுவரை மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து