முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவில் ‘மெர்சல்’ திரைப்படத்துக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராட்டம்

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: பெங்களூருவில் நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்' திரைப்படம் திரையிடுவதை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்' திரைப்படம் தீபாவளியன்று கர்நாடகாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. பெங்களூருவில் ராதாகிருஷ்ணா திரையரங்கில் பெரிய அளவில் விஜய் கட் அவுட் வைக்கப்பட்டதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் நிர்வாகி பிரவீன் ஷெட்டி தலைமையில் கன்னட அமைப்பினர் ராதாகிருஷ்ணா திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திரைப்படத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மெர்சல் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டு, ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். இதேபோல சம்பங்கி திரையரங்கத்துக்கு வெளியில் கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சாரா கோவிந்து உள்ளிட்ட கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மைசூருவிலும் கன்னட அமைப்பினர் மெர்சல் திரைப்படத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதனால் 3 திரையரங்குகளில் திரையிடப்பட்ட மெர்சல் பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

பிரவீன் ஷெட்டி கூறுகையில், ‘‘கன்னட அமைப்பினரை விஜய் ரசிகர்கள் தாக்கியுள்ளனர். கன்னடர்களைக் கொச்சைப்படுத்தி முழக்கம் எழுப்பியுள்ளனர். கன்னடர்களை தாக்கிவிட்டு, கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்களை திரையிடுவதை அனுமதிக்க முடியுமா? நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள மெர்சல் படத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிடில் போராட்டம் நடத்துவோம்''என்றார்.

இது தொடர்பாக ராதாகிருஷ்ணா திரையரங்கம் அமைந்துள்ள மல்லேஸ்வரம் காவல் நிலையத்தில் விசாரித்தபோது, “கன்னட அமைப்பினர் தாக்கப்பட்டதாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. பாதிக்கப்பட்டவர் யாரும் புகார் அளிக்காததால் வழக்குப் பதிவு செய்யவில்லை''என்றனர். திரையரங்க வட்டாரத்தில் விசாரித்தபோது, “கன்னட திரைப்படங்களுக்கு யாரும் பெரிய அளவில் பேனர் வைப்பதில்லை. தமிழ் திரைப்படங்களுக்கு பெரிய அளவில் பேனர் வைக்கப்படுகிறது. இந்த ஆத்திரத்தில் கன்னட அமைப்பினர் புதிய பிரச்சினையை கிளப்பி விடுகிறார்கள்''என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து