முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவாக்கிற்கு வித்தியாசமாக வாழ்த்து சொன்ன சச்சின்!

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: நேற்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக்கின் பிறந்த நாள் ஆகும். இன்றோடு அவருக்கு 39 வயது ஆகிறது. அவர் தனது பிறந்தநாளை டெல்லியில் கொண்டாடி வருகிறார்.

நேற்று அவரது பிறந்த நாள் என்பதால் கிரிக்கெட் வீரர்களும் , பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று முழுக்க அவர் டிவிட்டர் வாழ்த்து மழையால் நனைந்து வருகிறார். இதையடுத்து இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் , சேவாக்கிற்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் இந்த வித்தியாசமான வாழ்த்து டிவிட்டர் முழுக்க வைரல் ஆகியுள்ளது.

சேவாக்கிற்கு பிறந்த நாள்
 இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், பல அதிரடிக்கு சொந்தக் காரருமான வீரேந்திர சேவாக்கிற்கு நேற்று பிறந்த நாள் ஆகும். 1978ல் டெல்லியில் ஒரு சிறிய பகுதியில் இவர் பிறந்தார். இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி பல சாதனைகள் இவர் படைத்து இருக்கிறார்.

டிவிட்டரில் மிகவும் சிறப்பாக இயங்கி வரும் இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் மொத்த டிவிட்டர் உலகமே இவரை வாழ்த்திக் கொண்டு இருக்கிறது. சேவாக் பொதுவாக டிவிட்டரில் வித்தியாசமாக பேசுவார் என்பதால் அவருக்கு வரும் வாழ்த்து டிவிட்டுகளும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து