முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கர்னல்.ஜான் பென்னிகுயிக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்         .கொ.வீர ராகவ ராவ்,  தலைமையில்  நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மதுரை தோட்டக்கலைத் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் 2017-18ன் கீழ் இயந்திர தளவாடங்களான டிராக்டர் ரூ.75000 - மானியத்தில் 2 பயனாளிகளுக்கும், பவர் டில்லர் ரூ60000 - மானியத்தில் 5 பயனாளிகளுக்கும், பரப்பு விரிவாக்கம் சிறிய வெங்காய விதைகள் ரூ10000 - மானியத்தில் 2 பயனாளிகளுக்கும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் 2017-18ன் கீழ் நாவல் செடி ரூ7500 - மானியத்தில் 1 பயனாளிக்கும்,  கொடுக்காபுளி செடி ரூ.15000 - மானியத்தில் 1 பயனாளிக்கும், மானாவாரிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் 2017-18ன் கீழ் வெண்டை விதைகள் ரூ1440 - மானியத்தில் 2 பயனாளிகளுக்கும் என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ.4.95 லட்சம் மானியத்தில் வழங்கினார்.
வேளாண்மைத்துறை சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் 2017-18ன் கீழ் பவர்டில்லர் ரூ.75000 - மானியத்தில் 2 பயனாளிகளுக்கும், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் 2017-18ன் கீழ் ரோட்டவேட்டர் ரூ.35000 - மானியத்தில் 2 பயனாளிகளுக்கும், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் பண்ணை உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் விசைத்தெளிப்பான் ரூ.6370 - மானியத்தில் 2 பயனாளிகளுக்கும், தார்பாய் ரூ.5600  மானியத்தில் 1 பயனாளிக்கும், விவசாயக் கருவிகள் ரூ.800 - மானியத்தில் 2 பயனாளிகளுக்கும் வழங்கினார்.
வேளாண் பொறியியல் துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
   இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  ரெ.குணாளன், இணை இயக்குநர்(வேளாண்மை)  செல்வபாண்டி, மண்டல இணைப்பதிவாளர்(கூட்டுறவு சங்கங்கள்)  சந்திரசேகரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்  பூபதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து