முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 16வது பட்டமளிப்பு விழா!

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர்.- கிருஷ்ணன்கோவில்  அருள்மிகு  கலசலிங்கம்  கலை மற்றும் அறிவியல்  கல்லூரி 16வது பட்டமளிப்பு விழா  டாக்டர்  கே. எஸ்.  கிருஷ்ணன்  கலையரங்கில்  கலசலிங்கம் பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் எஸ்.  சந்திரா பட்டமளிப்பு அறிக்கை வாசித்து  வரவேற்றுப்பேசினார்.
மதுரை காமராசர் பல்கலை துணைவேந்தர் முனைவர் செல்லத்துரை  சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டு  பல்வேறு  துறைகளில்  பல்கலைக்கழக  ரேங்க்  பெற்ற 13 மாணவியர்க்கு   பதக்கங்களையும்,  426 இளநிலைப்பட்டதாரிகளுக்கும்,  12 முதுகலைப்பட்டதாரிகளுக்கும் பட்டங்களையும்  வழங்கினார்.
துணைவேந்தர்   பேசுகையில்,   மாணவர்கள் தங்களது  அறிவையும்  ஆற்றலையும்  நேர்வழியில்  செலுத்துதல்  வேண்டும்  என்றும்,  கடமைக்கு  முதலிடம்  அளித்து  உரிமைகளைச்சரிவரப் பயன்படு த்துத ல்வேண்டும் என்றும் கூறினார்.    மேலும்  மாணவர்கள்  எதிர்காலத்தில்  முன்னேற,  தன்னம்பிக்கையுடனும்,  தலைமைப்பண்புடனும்  செயல்ப டவேண்டும்.  மன  ஒருங்கிணைப்புடனும்  சுய விழிப்புணர்வுடனும் நடந்துகொள்ள  வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
குறிக்கோளுக்கு   முன்னுரிமை  அளித்து,  நேர  மேலாண்மையை  மனதில் வைத்து திட்டமிட்டுச் செயல்பட்டால்   வெற்றியின்  எல்லையை  மாணவர்கள்  எளிதாக  எட்ட இயலும் என்றும் சிறப்புவிருந்தினர் தன் உரையில் கூறினார்.
விழா ஏற்பாடுகளை  பேராசிரியர்கள் சிறப்பாக  செய்திருந்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து