முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டப்பேரவைத் தேர்தல் சுற்றுப்பயணம் பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

அகமதாபாத்: விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்தில், பிரதமர் நரேந்திர மோடி  இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் இன்னமும் தேர்தல் தேதியை அறிவிக்க வில்லை. எனினும், பிரதமர் நரேந்திர மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்தில், வாக்காளர்களை கவரும் வகையில், தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டு நல திட்டங்களை அறிவித்து வருகிறார்.

இந்த மாதத்தில் ஏற்கனவே இரண்டு முறை, அங்கு சுற்றுப் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் மூன்றாவது முறையாக, இன்று அவர் குஜராத் செல்கிறார். அப்போது, வதோதரா மற்றும் பாவ்நகர் மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், நல திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

பரூச் மாவட்டம், தாஹேஜில் இருந்து, பாவ் நகரர் மாவட்டம் ஹோகாவிற்கு படகு போக்குவரத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். மேலும் இரு மாவட்டங்களில், பொதுக்கூட்டங்களிலும் அவர் உரையாற்றுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து