முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரில் இருந்து இறங்கி சென்று போக்குவரத்து காவலர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொன்ன ஆந்திரா கவர்னர் நரசிம்மன்

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்: தீபாவளியன்றும் விடுமுறை எடுக்காமல் போக்குவரத்தை சீர்செய்து கொண்டிருந்த போலீஸ்காரரை, தனது காரில் இருந்து இறங்கி சென்று தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன்.

தெலங்கானா மாநிலத்தில் தீபாவளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு விடுமுறையும் 19-ம் தேதி வழங்கப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையிலும் தீபாவளி பண்டிகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் காலை வெளியே சென்றிருந்த தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களின் கவர்னர் நரசிம்மன், காரில் ராஜ்பவனுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது சைபராபாத் அருகே போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். உடனடியாக காரை நிறுத்த சொன்னார் கவர்னர். பின்னர் காரில் இருந்து இறங்கி, போக்குவரத்து பணியில் இருந்த அனைத்து போலீஸாருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை எடுக்காமல் பணி செய்யும் போலீஸாரை அவர் வாழ்த்தினார். பின்னர் அவர் ராஜ்பவன் சென்றார். கவர்னரே காரை விட்டு இறங்கி வந்து வாழ்த்து சொன்னதால் போலீஸார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து