முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரபரப்பை ஏற்படுத்திய மெர்சல் வசனங்கள்

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: பாஜகவினரை கோபத்தில் ஆழ்த்தி, நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய மெர்சல் படத்தின் வசனங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மாநிலம், தேசியம் என இரு வரிகளும் ஒன்றாக சேர்த்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் அத்தியாவசிய பொருள்களுக்கு அதிக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் உயிரைக் கெடுக்கும் சாராயத்துக்கு ஜி.எஸ்.டி.யே கிடையாது.

இதனால் பா.ஜ.க மீது நாடு முழுவதும் அதிருப்தி நிலவியது. மேலும் எதிர்த்து கேள்வி எழுப்பியவர்களின் வாயை பாஜகவினர் எதையாவது சொல்லி அடைத்து வந்தனர்.
விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி, மருத்துவத் துறை, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை குறித்து நடிகர் விஜய் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இது பா.ஜ.க.வை கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டது.

ஜி.எஸ்.டி குறித்து மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்று பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். மேலும் மக்கள் நலன் சார்ந்த படம் என்றால் இலவசமாக மக்களுக்கு காட்ட வேண்டியதுதானே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் பா.ஜ.க கோபமடைய காரணமாக இருந்த விஜய் பேசும் வசனங்கள் வீடியோ காட்சிகளாக தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வசனம் இதுதான்:
1.  7 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூர் அந்த நாட்டு மக்களுக்கு மருத்துவத்தை இலவசமாக தரப்போ 28 சதவீத ஜிஎஸ்டி வாங்கும் நம்ம அரசாங்கத்தால ஏன் மருத்துவத்தை இலவசமாக தர முடியவில்லை.

2.  மெடிசினுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி.யாம், ஆனால் தாய்மார்களின் தாலியை அறுக்கும் சாராயத்துக்கு ஜி.எஸ்.டி.யே கிடையாது. நம்ம நாட்டோட நம்பர் 1 மருத்துவமனையில ஆக்சிஜன் சிலிண்டரே இல்லை. என்னடா காரணம் கேட்டா, ஆக்சிஜன் சப்ளை செய்யும்  நிறுவனத்துக்கு 2 வருஷமா பணம் பாக்கியாம்.

3.  இன்னொரு கவர்மென்ட் ஆஸ்பிட்டலில் டயாலிசிஸ் பன்றப்ப கரென்ட் கட் ஆகி 4 பேர் செத்தே போயிட்டாங்க. ஒரு பவர் பேக்கப் கூட இல்லை. இன்குபேட்டரில் இருந்த குழந்தை பெருச்சாளி  கடிச்சு இறந்தத நம்ம ஊர்ல மட்டும்தான்யா பாக்க முடியும். ஜனங்க நோயை பார்த்து பயப்படறத விட கவர்மென்ட் ஆஸ்பிட்டலை பார்த்துதான் பயப்படறாங்க. அந்த பயம்தான் பிரைவேட் ஆஸ்பிட்டல்லோட இன்வெஸ்மென்ட் என்று விஜய் வசனம் பேசியுள்ளார்.

4. அப்ப உங்க கொலையை நியாயப்படுத்த பாக்கிறீங்களா என படத்தில் செய்தியாளர் ஒருவர் விஜய்யிடம் கேள்வி எழுப்புகையில், நான் செஞ்சது கொலையே இல்ல. எவன் சொன்னான். செல்லரிச்சு போன மெடிக்கல் சிஸ்டத்தோட கிளீனிங் பிராசஸ் என்று விஜய்யின் வசனம் இடம்பெற்றுள்ளன. இந்த வசனங்கள்தான் பாஜகவை கோபப்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து