முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விஜய் வசனத்துக்கு எதிராக மருத்துவர்கள் போர்க்கொடி

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: அரைவேக்காட்டு தனமாக அட்லீ வசனம் எழுதியுள்ளார். மருத்துவர்கள் குறித்து விஜய் கூறியுள்ள கருத்துக்களை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று மருத்துவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படம் ரிலீஸ் முதல் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்களை நீக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவைத் தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு பிரிவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  அரசு மருத்துவமனைகளில் நல்ல சேவை இல்லை என்பதால் தனியர் மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்கின்றனர் என்றும், பணம் சம்பாதிப்பதற்காகவே டாக்டர் தொழிலை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஹெல்த் செக்அப் என்பது மோசடி என்றும் கூறுவார் விஜய். 5 ரூபாய் டாக்டர் என்றுதான் அந்த படத்தில் விஜய்க்கு பெயரே. அதோடு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளைப் பற்றியும் விமர்சனம் செய்திருப்பார் விஜய். இதனிடையே நடிகர் விஜய் கருத்துக்கு அரசு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள், நடிகர் விஜய் மருத்துவ செக்அப் செய்து கொண்டதே இல்லையா? என்று கேட்டனர். சர்ச்சைக்குரிய வசனத்தை படத்தில் இருந்து நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினர். தமிழகம் முழுவதும் இலவசமாக தரமாக சிகிச்சை தரும் அரசு மருத்துவமனைகள் இருப்பது கண்ணுக்கு தெரியவில்லையா? என்று கேட்ட மருத்துவர்கள், தமிழகத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதனால்தான் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு ரயில் மூலம் சிகிச்சை பெற வருகின்றனர் என்றார். அரைவேக்காட்டு தனமாக அட்லீ வசனம் எழுதியுள்ளார். மருத்துவர்கள் குறித்து விஜய் கூறியுள்ள கருத்துக்களை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து