முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக கருத்துக்களை நீக்க வேண்டியதில்லை: விஜய் மற்றும் `மெர்சல்' படக்குழுவுக்கு விஷால் பாராட்டு

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, மெர்சல்' படத்தின் மூலம் மக்களுக்கு சமூக கருத்துக்களை சொல்லியிருக்கும் விஜய், அட்லி மற்றும் படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.

அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் மெர்சல். இப்படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில், படம் வெளியான பின்னரும் மெர்சல் படத்திற்கு சோதனை வந்திருக்கிறது. படத்தில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பிழப்பு உள்ளிட்ட சில வசனங்கள் மற்றும் காட்சிகளை நீக்க வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் தமிழிசை வலியுறுத்தினார்.

இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான அந்த காட்சிகளை தயாரிப்பு தரப்பு நீக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், படத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களமிறங்கி இருக்கின்றனர். காங்கிரஸ், திமுக, மதிமுக உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் மெர்சல் படத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறியதாவது:

`மெர்சல்' படத்தின் மூலம் மக்களுக்கு சமூக கருத்துக்களை சொல்லியிருக்கும் விஜய், அட்லி மற்றும் படக்குழுவுக்கு எனது பாராட்டுக்கள். தனிமனிதனாகவோ, படங்களிலோ தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவது கருத்து சுதந்திரமே. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். தான் நினைத்ததை சொல்லும் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. அது திரைத்துறையினருக்கும் உண்டு. ஹாலிவுட் படங்களில் கூட அந்நாட்டு அதிபர்களை கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. எனவே வசனங்கள் காட்சிகளை நீக்க சொல்லி வற்புறுத்துவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல். சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை.

இவ்வாறு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து