முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்தான் ரிசர்வ் வங்கி விளக்கம்

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

மும்பை: வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்தான் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

எச்சரிக்கை
மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள், மானியங்களைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக கேஸ் இணைப்பு, ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று வங்கிக் கணக்குடனும் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து வருகின்றனர். இணைக்காவிட்டால் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று வங்கிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.

வெளியிடவில்லை
இந்நிலையில், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை என்றும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகினது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மணிலைஃப்.இன் என்ற இணையதளம் எழுப்பியிருந்த கேள்விக்கு ரிசர்வ் வங்கி இந்த விளக்கத்தை தெரிவித்து இருந்தது.

ரிசர்வ் வங்கியின் பதிலில், “பண மோசடியை தடுக்கும் பொருட்டு, வங்கிகள் உரிய ஆவணங்களை பராமரிக்கும் பொருட்டு, மத்திய அரசு ஜூன் 1-ம் தேதி அன்று வங்கிகளில் புதிய கணக்கு துவக்க விரும்புவர்கள் மற்றும் தற்பொழுது கணக்கு உள்ளவர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் நிரந்தர கணக்கு எண்(பான் அட்டை) இரண்டையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையானது மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டதே ஒழிய, ரிசர்வ் வங்கி இது தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கட்டாயம்
இதனால், வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமா? இல்லையா? என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்தான் என்று ரிசர்வ் வங்கி தரப்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் முதன்மை பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் இல்லை என்பது போன்று வெளியாகும் செய்திகள் தவறானவை என்று கூறியுள்ளார். மேற்கொண்டு எந்தவொரு அறிவிப்புக்காகவும் காத்திருக்காமல் ஆதார் இணைப்பை மேற்கொள்ள வேண்டும். என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து