முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவிச்சர்லாந்திற்கான இந்திய தூதராக சிபி ஜார்ஜ் நியமனம்

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் சிபி ஜார்ஜ் சுவிச்சர்லாந்திற்கான இந்திய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1993 இந்திய வனத்துறை அதிகாரியான சிபி ஜார்ஜ் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணை செயலாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சிபி சுவிச்சர்லாந்திற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்சமயம் சுமிதா புருஷோத்தமன் தூதராக உள்ளார். அவரின் இடத்தில் சிபி நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் சிபி பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் சிபி ஜார்ஜ், சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தலைவராக பணியாற்றி உள்ளார். 2014 ம் ஆண்டு வெளியுறவுத்துறை தூதராக சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு எஸ்.கே.சிங் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து