முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'மெர்சல்' திரைப்பட பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டியது தணிக்கை துறைதான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : மெர்சல் பட பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது தணிக்கை துறை தான் என்றும், இதில் தமிழக அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எவரெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு 190 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணிகளை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தணிக்கை துறையால்...

திரைப்படத்துறை எனது அமைச்சகத்தன் கீழ் தான் வருகிறது. தணிக்கை செய்த படங்களை வெளியிடுவதில் பிரச்சினை என்றால் தமிழக அரசு தலையிட்டு வெளிவர உதவி புரியும். நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு பிரச்சனை வந்தபோது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு இருதரப்பினரையும் அழைத்து பேசி திரைப்படம் வெளிவர உதவி செய்தார். சர்ச்சைக்குரிய வசனம், காட்சிகள் இடம் பெற்றால் அதனை நீக்க மத்திய அரசினால் நியமிக்கபட்ட தணிக்கைத்துறைக்கு தான் அதிகாரம் உள்ளது. தணிக்கைத் துறைக்கும், தமிழக அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு என்றால் அவர்கள் தணிக்கைதுறையினை தான் நாட வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து