முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலிக்கு இன்னும் டோனியின் ஆலோசனை தேவை முன்னாள் வீரர் கங்குலி சொல்கிறார்

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை: இந்தியாவின் வெற்றி கேப்டனாக திகழும் விராட் கோலிக்கு இன்னும் டோனியின் ஆலோசனை தேவைப்படுகிறது என கங்குலி கூறியுள்ளார்.

ஆலோசனை தேவை
இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வருகிறது. தொடர்ந்து 8 டெஸ்ட் தொடர்களையும், 6 ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி கேப்டனாக இருந்தாலும், விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனும் ஆன டோனியிடம் ஆலோசனை கேட்டு வருகிறார். விராட் கோலிக்கும் இன்னும் டோனியின் ஆலோசனை தேவை என கங்குலி கூறியுள்ளார்.

கோலி விருப்பம்

இதுகுறித்து கங்குலி கூறுகையில்.,
‘‘டோனி இந்திய அணியில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விராட் கோலி விரும்புகிறார். தற்போது அவருக்கு 36 வயதாகிறது. 2004-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய டோனியாக அவர் இல்லை. என்றாலும், தற்போது மாறுபட்ட வீரராக உள்ளார். டோனி விராட் கோலி வெறும் விக்கெட் கீப்பராக மட்டும் பார்க்கவில்லை. கேப்டன் பதவிக்கான அனைத்து தகுதியில் உள்ள டோனியிடம் இருந்து சிறந்த அறிவுரையை பெறுகிறார்.

முக்கியமானது
டோனிக்கு விராட் கோலி ஆதரவாக உள்ளார். அவருடைய ஆட்டம் மாறிவிடடது. இது எல்லோருக்கும் நிகழ்வதுதான். வயதாகும்போது உங்களுடைய இடம் குறித்து கவலை இருக்கும். இதனால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். டோனியால் 2019 உலகக்கோப்பை தொடர் வரை விளையாட முடியும் என்று நினைக்கிறேன். அவரது உடற்தகுதி மிகவும் முக்கியமானது. விராட் கோலி அவருக்கு பக்க பலமாக இருக்கிறார் என்பது டோனிக்குத் தெரியும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து