இசையமைப்பாளர் யார் என்பதை ரகசியமாக வைத்து பாடல் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்துகின்றார்கள்

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      சினிமா
Prabhakar

Source: provided

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களை ரகசியமாக வைத்திருப்பது வழக்கம். ஆனால் சமீப காலமாக இசையமைப்பாளர் யார் என்பதை ரகசியமாக வைத்து பாடல் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்துகின்றார்கள்.

அதேபோல் கவுதம் கார்த்திக் நடித்துள்ள ‘இந்திரஜித்’ படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை சமீபத்தில் நடந்த அதன் இசை வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தியது படக்குழு. பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் மாணவரான கே.பி. என்கிற பிரபாகர் இந்த நிகழ்ச்சியில் அறிமுப்படுத்தப்பட்டார்.

நாயகன் அறிமுகப்பாடலை புலமைப்பித்தன் எழுத மீதமுள்ள கபிலன் வைரமுத்து எழுதி உள்ளார். சாந்தனு நடிப்பில் வெளிவந்த சக்கரகட்டி படத்தை இயக்கிய கலா பிரபு இப்படத்தை இயக்கி உள்ளார். கலைப்புலி தாணு பிரமாண்ட முறையில் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் எம்எஸ் பாஸ்கர், சுதான்ஷý பாண்டே, அங்கூர் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராசா மதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கனிம வளங்களின் முக்கியதுவம் பற்றி எடுத்துரைக்கும் படமாக இது உருவாகிறது.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து