முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் “ வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3 “.

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

இப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார் ரோஷன். இயக்குநர் ஹரியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய முருகேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தை பற்றி நாயகன் ரோஷன் கூறியது :- பொய் பேசுபவர்கள் யாரும் பிடித்து பொய் பேசுவதில்லை. அப்படி பொய் பேசுபவர்கள் யாரும் எங்கள் படத்தை பார்த்தால் நிச்சயம் பொய் பேசமாட்டார்கள்.அரசியல்வாதிகள் அதிகமாக பொய் பேசுவார்கள். அவர்கள் பொய் பேசகூடாது.

இந்த படத்தை பார்த்த பிறகு அவர்கள் எல்லோரும் பொய் சொல்ல தயங்குவார்கள். அந்த அளவுக்கு இந்த படத்தில் புரட்சிகரமான ஒரு கருத்து உள்ளது. இந்த படமே ஒரு புரட்சிகரமான படம்தான். நான் இந்த படத்தில் சேகுவேரா போன்றதொரு புரட்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

சேகுவேரா செஞ்சி அருகே ஒரு கிராமத்தில் பிறந்து மைக் செட்காரனாக இருந்து புரட்சி செய்தால் எப்படி இருக்கும் ?? அது தான் எங்கள் படத்தின் கதை களம்.படத்தில் நான் அரசியல் கூட்டங்களுக்கு மைக் செட் போடுபவனாக வருகிறேன்.

அரசியல் கட்சி கூட்டங்களுக்கு மைக் செட் போடும் போது சில பிரச்சனைகளை சந்திக்கவேண்டி இருக்கும் , அந்த பிரச்சனைகளின் மூலம் தான் கதை சூடு பிடிக்கும். படத்தில் நாங்கள் பிரதமர் மோடி முதல் , சூப்பர் ஸ்டார் ரஜினி வரை சமகால அரசியல் பற்றி பேசியுள்ளோம்.

படத்தில் புகை பிடிக்கும் காட்சியோ , மது குடிக்கும் காட்சியோ கிடையாது. இந்த படத்துக்காக நான் 250 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்துள்ளேன். படத்தை நாங்கள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் தான் அதிகம் படம்பிடித்துள்ளோம். இப்போது படத்தின் இறுதிகட்ட எடிட்டிங் பனி நடைபெற்றுவருகிறது. ஹர்ஷிதா பன்வர் என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடிக்கிறார்.

ஹர்ஷிதா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் படத்தில் இமான் அண்ணாச்சி , கருணாஸ் , சரத் லோகிச்த்வா , வம்சிகிருஷ்ணா , யார் கண்ணன் , மாரிமுத்து , ஆர்.என்.ஆர். மனோகர் , அணு கிருஷ்ணன் , ரிஷா , செவ்வாழை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து