பிரபுவுடன் போட்டி போட்டு நடித்தேன்: பிரசாந்த்

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      சினிமா
Prasanth

Source: provided

வெற்றிச்செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்து வரும் ஜானி படத்தில் தான் பிரபுவுடன் போட்டி போட்டு நடித்ததாக நடிகர் பிரசாந்த் கூறியிருக்கிறார்.

சாஹசம்’ படத்துக்கு பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் ‘ஜானி’. ஸ்டார் மூவிஸ் சார்பில் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்துடன் பிரபு, சஞ்சிதாஷெட்டி, ஆனந்தராஜ், கலைராணி உள்பட பலர் நடிக்கிறார்கள். வெற்றிச்செல்வன் இயக்குகிறார்.

இதில் நடித்தது பற்றி கூறிய பிரசாந்த்... “இந்த படத்தில் நான் இதுவரை நடிக்காத பாத்திரத்தில் நடிக்கிறேன். நான் மட்டும் அல்ல மற்றவர்களும் அப்படித்தான். பிரபு இதற்கு முன்பு நடிக்காத ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபு சாருடன் நடிக்கும்போது மிகவும் பயத்துடன் நடித்தேன்.


கேமராவுக்கு பின்னால் கலகலவென ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருப்பார்.கேமராவுக்கு முன்னால் அப்படியே கேரக்டராக மாறி விடுவார். ஒவ்வொரு காட்சியிலும் அவர்தான் முன்னணியில் இருப்பார். அவருக்கு சமமாக நிற்க வேண்டும் என்பதற்காகவே, அவரை போட்டியாக நினைத்துக் கொண்டு நடித்தேன்.

நான் நன்றாக நடிக்கும்போது என்னை தட்டிக் கொடுத்து பாராட்டுவார்.சஞ்சிதா ஷெட்டிக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும். இது ஆக்‌ஷன் திரில்லர் படம். ஹாலிவுட் தரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. 17 செட்டுகள் போட்டு இந்த படம் எடுக்கப்பட்டது.

வசன காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. பாடல் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இது ரசிகர்கள் விரும்பும் வித்தியாசமான படமாக இருக்கும்” என்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து மெகா ஹிட்டான ஜானி படத்தின் தலைப்பில் தற்போது பிரசாந்த் நடிக்க உள்ளார். இப்படத்தை ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் தயாரிக்கிறார். இதில் பிரசாந்த் ஜோடியாக சஞ்சிதா செட்டி நடிக்கிறார்.

இதில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனந்த்ராஜ் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் அசுத்தோஸ் ராணா, சாயாஜி ஷிண்டே நடிக்கின்றனர். புதுமுக இயக்குனர் வெற்றிச்செல்வன் இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 77 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. படம் விறுவிறுப்பான திரைக்கதையோடு சஸ்பெண்ஸ் மற்றும் சண்டை காட்சிகள் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகிறது. பாடல் காட்சிகள் மட்டுமே மீதமுள்ளது.

அதை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளோம். இப்படத்திற்கு 3 இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். அவர்கள் யார் என்று இசை வெளியீட்டு விழாவின் போது தெரிவிப்போம். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து