திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 16 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      ஆன்மிகம்
tirupati 2017 04 14

திருப்பதி : நரக சதுர்த்தி, தீபாவளி, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை வந்ததால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் திருமலையில் உள்ள 31 வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ்களும் நிறைந்தன. இதனால் காம்ப்ளக்ஸுக்கு வெளியே சுமார் 2 கி.மீ. தூரம் வரையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் தர்ம தரிசனம் முறையில் சுவாமியை தரிசிக்க 16 மணி நேரம் காத்திருந்தனர். நடைபயணமாக மலையேறி வந்த பக்தர்கள் 5 மணி நேரமும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், முடி காணிக்கை செலுத்தவும், தங்கும் அறைகளுக்காகவும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து