முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் படகுப் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

காந்திநகர் :  குஜராத்தில் தமது கனவுத் திட்டமான தாகேஜ்- கோகா படகுப் போக்குவரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்காததால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. பா.ஜ.க.,விற்கு இந்தத் தேர்தல் மிக முக்கியமான ஒன்று. அதனால், வெற்றிபெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கடந்த வாரத்தில் கூட பல்வேறு சலுகைகளை அறிவித்தார் முதல்வர் விஜய் ரூபாணி.

இந்நிலையில், திட்டமிட்டபடி நேற்றுகாலையில் குஜராத்  வந்து சேர்ந்தார் .பிறகு பிரதமர் மோடி. தாகேஜ் - கோகா படகுப் போக்குவரத்துத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தத் திட்டத்திற்கு 2012ல் அடிக்கல் நாட்டியவர் மோடி. ரூ 615 கோடி செலவில் தயாராகி இருக்கிறது இத் திட்டம். இது மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்று.

முன்னதாக கடந்த 8 ம்தேதி பிரதமர் மோடி தனது சொந்த ஊரான வட்நாகருக்குச் சென்று பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் சில தினங்கள கழி்த்து மீண்டும் குஜராத் சென்று காந்திநகரில் நடந்த பாரதிய ஜனதா  பொதுக்கூட்டத்தில் பேசினார்.  பிறகு நேற்று மீண்டும் தனது மாநிலத்துக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு படகு சேவைத் திட்டத்தை தொடங்கிவைத்தார் . இந்த திட்டத்தை தொடங்கிய வைத்து பேசிய பிறகு பிரதமர் மோடி படகில் பயணம் செய்து தஹேஜ் பகுதிக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து வதோதரா மாவட்டத்துக்கு சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில குஜராத் மாநிலத்துக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து