முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு17 உலகக் கோப்பை கால்பந்து அரை இறுதியில் மாலி, இங்கிலாந்து

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி :  17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதிக்கு மாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னேறின. கானா மற்றும் அமெரிக்காவின் பயணம் முடிவுக்கு வந்தது.

17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை இந்தியா முதல் முறையாக நடத்தி வருகிறது. இந்தியா உள்பட மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த முதல் காலிறுதி ஆட்டத்தில் கானாவை 2-1 என்ற கோல் கணக்கில் மாலி வென்றது. மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து 4-1 என அமெரிக்காவை வீழ்த்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து