முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் தேவர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவிக்கிறார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பான ஏற்பாடு

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று விருதுநகர் செல்லும் வழியில் திருமங்கலம் நகருக்கு வருகை தந்து தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தவுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்திட தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் விருதுநகரில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருமங்கலம் நகருக்கு வருகை புரிகிறார்.பின்னர் திருமங்கலம் நகர் தேவர் திடலிலுள்ள தேவர் திருகனாரின் திருவுருவச் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலையணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதனிடையே திருமங்கலம் நகருக்கு வருகைதரும் தமிழக முதல்வருக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பல்லாயிரக்கணகக்கான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு கொடுக்கவுள்ளனர்.தமிழக முதல்வரின் திருமங்கலம் வருகையை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்து திருமங்கலம் நகருக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு கொடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது திருமங்கலம் நகருக்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு வரலாறு காணாத அளவில் எழுச்சிமிகு வரவேற்பளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அப்போது முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாவட்ட சார்பு அணிநிர்வாகிகள் திருப்பதி,தமிழ்ச்செல்வம்,திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் வக்கீல்.அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய கழக செயலாளர் உலகாணி.மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணி மற்றும் திருமங்கலம் தொகுதி கழக  நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து