முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடி நகராட்சி டெங்கு ஒழிப்பு பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

பரமக்குடி - இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு டெங்கு காய்ச்சல் பரவுவது கட்டுபாட்டில் உள்ளது. மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முற்றிலும் இல்லாத நிலை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசின் அருகிலுள்ள டெங்கு ஏடிஸ் கொசு மீதான போர் என்ற டெங்கு தடுப்பு சிறப்பு பணியினை அரசு பணியாளர்களோடு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்,சுயஉதவி குழுவினர், தொண்டு நிறுவனங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோரையும் பங்கெடுக்க வைத்து இப்பணியினை மக்கள் இயக்கமாக மாவட்டம் முழுவதும் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.                         அதன்படி முதல் கட்டமாக பரமக்குடி நகரில் அக்டோபர் 22 முதல் ஒவ்வோரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளிலும் ஒரு வார்டுக்கு ஒரு பொறுப்பு அலுவலர், ஒரு டெங்கு தடுப்பு பணியாளர்,ஒரு துப்புரவு பணியாளர் அடங்கிய 3 நபர்கள் கொண்ட ஒரு குழு வீதம் 36 வார்டுகளுக்கு 108 நபர்களை கொண்ட 36 குழுவினர் வீடுவீடாக சென்று வீட்டிலுள்ள தண்ணீர் சேமிப்பு கலன்களை சுத்தம் செய்யவும், வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் துண்டு பிரசுரங்கள் வழங்குவதோடு அந்த பகுதியில் அமைந்துள்ள நகராட்சி சின்டெக்ஸ் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு கழுவி சுத்தம் செய்தும் பொதுமக்கள் இப்பணியினை வாரம் தோறும் அவரவர் வீட்டில் செய்வதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  இப்பணியினை மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.                            மேலும் பரமக்குடி நகராட்சி பகுதியில் தற்போது 50 டெங்கு தடுப்பு பணியாளர்களை கொண்டு 6 குழுக்களாக பிரிந்து 36 வார்டுகளிலும் திங்கள் முதல் சனி வரை பணி நடைபெற்று வருகிறது.இப்பணிக்கு கூடுதலாக 20 பணியாளர்களை சேர்த்து மொத்தம் 70 டெங்கு தடுப்பு பணியாளர்களை இப்பணியில் ஈடுபடுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.                  பரமக்குடி அக்கரையில் அமைந்துள்ள எமனேஸ்வரத்தில் மாவட்ட ஆட்சியர் முனைவர் நடராஜன் தலைமையில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி ஆய்வு மேற்கொண்டார்.உடன் சார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், நகராட்சி ஆணையாளர் நாராயணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள்,ஊழியர்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து