முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வாக்காளர்களாக தங்களை சேர்க்கக்கோரி மாநிலம் முழுவதும் 2.31 லட்சம் பேர் விண்ணப்பம்

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : வாக்காளர்கள் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்கக்கோரி 2 லட்சத்து 31 ஆயிரத்து 65 பேர் மனுக்களை வழங்கியுள்ளனர்.

வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் கடந்த 8 ம்தேதி தமிழகத்தில் உள்ள 60 ஆயிரம் வாக்குசாவடிகளில் முதற்கட்டமாக நடந்தது. இதனை அடுத்து நேற்று இரண்டாவது கட்ட வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் புதிய வாக்காளர்களாக சேர மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 31 ஆயிரத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர், பெயர்களை நீக்குவது தொடர்பாக 52 ஆயிரத்து 539 பேரும், திருத்தங்கள் செய்வது தொடர்பாக 46 ஆயிரத்து 663 பேரும், ஒரே தொகுதியில் முகவரி மாற்றம் தொடர்பாக 27 ஆயிரத்து ஒருவரும் மனுக்களை வழங்கியுள்ளனர், மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 57 ஆயிரத்து 268 பேர் மொத்தம் விண்ணப்பங்களை வழங்கியிருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. சென்னையில் புதிய வாக்காளர்களாக சேர 12 ஆயிரத்து 563 பேர் நேற்று மனு செய்துள்ளனர், இதில் பெயர்களை நீக்கக்கோரி 307 பேரும், திருத்தங்கள் செய்யக்கோரி ஆயிரத்து 818 பேரும், ஆக மொத்தம் 18 ஆயிரத்து 345 பேர் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்,

கன்னியாகுமரியில் புதிய வாக்காளர்களாக தங்களது பெயர்களை சேர்க்கக்கோரி 6 ஆயிரத்து 98 பேரும், பெயர்களை நீக்கம் செய்யக்கோரி 7 ஆயிரத்து 795 பேரும், திருத்தங்கள் செய்யக்கோரி 1010 பேரும், ஒரே தொகுதியில் வெவ்வேறு இடங்களுக்கு விலாசங்கள் மாறியதற்காக 524 பேரும் மொத்த விண்ணப்பங்களாக 9ஆயிரத்து 362 பேர் நேற்று மனுக்களை அளித்துள்ளனர், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 985 பேர் மனுக்களை வழங்கியுள்ளனர், இவர்களில் 5 ஆயிரத்து 4 பேர் புதிய வாக்காளர்களாக சேரவும் 823 பேர் பெயர்களை நீக்கம் செய்யவும் திருத்தங்களை மேற்கொள்ளக்கோரி 1504 பேரும், ஒரே தொகுதியில் இடமாற்றம் குறித்து 654 விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர், அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 201 புதிய வாக்காளர்களாக தங்களை சேர்க்க விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர், இதில் பெயர்களை நீக்கம் செய்யக்கோரி 656 பேரும் திருத்தங்களை செய்யவேண்டி 3 ஆயிரத்து 92 பேரும், தொகுதிக்குள்ளே முகவரி மாற்றம் செய்ய வலியுறுத்தி ஆயிரத்து 393 பேரும் மனு அளித்துள்ளனர், இந்த மாவட்டத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 347 பேர் தங்களது விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர், மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க 8 ஆயிரத்து 591 பேரும், பெயர்களை நீக்கம் செய்யுமாறு 3 ஆயிரத்து 236 பேரும், திருத்தம் வேண்டி 1157 பேரும், ஒரே தொகுதியில் முகவரி மாற்றம் அடைந்து விட்டதாக 830 பேரும் ஆக மொத்தம் 13 ஆயிரத்து 814 பேர் தங்களது மனுக்களை தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து