முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராஜேந்திர ரத்னூ, தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 23 அக்டோபர் 2017      கன்னியாகுமரி

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2018 தொடர்பான வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் கலெக்டர்அலுவலக கூட்ட அரங்கில் வைத்து, பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்               இராஜேந்திர ரத்னூ, . அவர்களின் தலைமையில் 23.10.2017 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.              இக்கூட்டத்தில் கலெக்டர்சஜ்ஜன்சிங் ரா.சவான், . முன்னிலை வகித்தார்.தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 04652-279090 கலெக்டர் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றும்,18-19 வயதிற்குட்பட்ட இளம் வாக்காளர்களை பெருமளவில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், இறந்த, இடம் பெயர்ந்த வாக்காளர்களை கண்டறிந்து, அவர்களை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களுக்கு உடனே நடவடிக்கை மேற்கொண்டு நிவர்த்தி செய்ய வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.  05.01.2017 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் மொத்த மக்கள் தொகை விகிதாச்சாரம் அடிப்படையில் வேறுபாடுள்ள பாகங்களை கண்டறிந்து, அதனை ஆய்வு செய்து, அவற்றை சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் ராகுல்நாத், ., மாவட்ட வருவாய் அலுவலர்  இளங்கோ, பத்மனாபபுரம் சார் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா, ., நாகர்கோவில் கோட்டாட்சியர் திருமதி ஆர்.ஜானகி, நாகர்கோவில் நகராட்சி ஆணையர் கே.சரவணகுமார், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் எம்.வி.சஜித், தோவாளை வட்டாட்சியர் பி.சாரதாமணி, கல்குளம் வட்டாட்சியர் இக்னேஷியஸ் சேவியர், விளவங்கோடு வட்டாட்சியர் எம்.ரெத்தினம், தேர்தல் தனி வட்டாட்சியர் பி.சுப்பிரமணியம் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் பத்மனாபபரம் நகராட்சி ஆணையர் ற்றி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் இக்கூட்டத்தில் தி.மு.க. சார்பில் பி.லீனஸ்ராஜ், அ.இ.அ.தி.மு.க. சார்பில் எம்.சந்திரன், காங்கிரஸ் சார்பில் சரலூர் சேகர், கம்யூனிஸ்ட் சார்பில் என்.எஸ்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து