முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்: கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு

திங்கட்கிழமை, 23 அக்டோபர் 2017      திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சி சிந்துபூந்துறை மற்றும் உடையார்பட்டி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் துப்புரவு பணிகளை கலெக்டர்சந்தீப் நந்தூரி  அதிகாலையில் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

துப்புரவு பணி

சிந்துபூந்துறை மற்றும் உடையார்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மெகா துப்புரவு பணிகள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர்சந்தீப் நந்தூரி  பார்வையிட்டார். தொடர்ந்து, வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டிகள், டிரம்கள் உள்ளிட்டவைகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டுகிறதா என ஆய்வு செய்தார். டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களிடம் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக பணியாற்ற வேண்டுமென உத்தரவிட்டார். மேலும், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களில் கொசு புழு உற்பதியாகிறதா என்பதையும், கொசு ஒழிப்பு புகை மருந்து அடிப்பதையும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலாவதாக வீடு, வீடாக சென்று கொசு மருந்து அடித்தல், தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுதல், விழிப்புணர்வினை ஏற்படுத்துதல், இரண்டாவதாக பள்ளி, கல்லூரி, ஆலயங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களை கண்டறிந்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், மூன்றாவதாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களை கொண்டு பொதுமக்களிடம் டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் கண்காணிப்பாளர் ராஜேந்திரகுமார்  நாளை (24.10.2017) திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் துப்புரவு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மற்றும் கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளவுள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை நாள்தோறும் அதிகாலை முதல் ஆய்வு செய்து வருகின்றனர். கொசு ஒழிப்பு பணிகளில் 2000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு பல்வேறு பகுதிகளில் தீவிரமாக கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் (பொ) நாராயணநாயர், மாநகர நல அலுவலர் மரு.பொற்செல்வன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து