முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணி குறித்த சிறப்பு பயிற்சி

திங்கட்கிழமை, 23 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் தலைமையில், மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுப்புழு ஒழிப்பதற்கான களப்பணியில் ஈடுபடும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியைச் சார்ந்த மாணவிகளுக்கு வழங்கப்பட்ட களப்பணி குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள், சுற்றுப்புற தூய்மைப்படுத்தும் பணிகள், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து முறையான மருத்துவ சிகிச்சை வழங்கி பாதுகாத்தல், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துதல் என்கின்ற அடிப்படையில் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  அதேபோல இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பரமக்குடி அரசு மருத்துமனை ஆகியவற்றில் பொதுமக்கள் நலனுக்காக 24 மணி நேரமும் செயல்படும் வைரஸ் காய்ச்சல் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டு மருத்துவர்கள் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக மருத்துவபணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 இந்நிலையில் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளில்  ராமநாதபுரம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியைச் சார்ந்த மாணவிகளை பகுதி வாரியாக குழுக்களாக ஒருங்கிணைத்து களப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.  இதன்மூலம் சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு கூடுதல் பயிற்சியாகவும், பொதுமக்களுக்கு ஏடிஸ் கொசுப்புழு குறித்த கூடுதல் விழிப்புணர்வும் ஏற்படும்.  அதனடிப்படையில் கொசுப்புழு ஒழிப்பு களப்பணியில் ஈடுபடும்  அரசு செவிலியர் பயிற்சி பள்ளியைச் சார்ந்த மாணவிகளுக்கு இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இன்றைய தினம் பொது சுகாதாரத்துறையின் சார்பாக சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.  இப்பயிற்சியில் மாணவிகளுக்கு ஏடிஸ் கொசுப்புழுவினால் ஏற்படும் பாதிப்புகள், கொசுப்புழு உற்பத்தியினை கண்டறிவதற்கான நடைமுறைகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.  இப்பயிற்சியினை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பார்வையிட்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். 
 அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பயன்பாட்டில் இருந்த இரத்த அணு கணக்கீட்டு கருவியுடன் தற்போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக  கொண்டு வரப்பட்டுள்ள புதிய இரத்த அணு கணக்கீட்டு கருவியினைப் பார்வையிட்டார்.  கூடுதலாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள இக்கருவியின் மூலம் பொதுமக்கள் சிரமமின்றி இரத்த சிவப்பணுக்ககள், வெள்ளையணுக்கள், இரத்த தட்டுகள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட விவரங்களை கால விரயமின்றி பெற்று பயனடையலாம்.  இதுதவிர மேலும் கூடுதலாக இரண்டு இரத்த அணு கணக்கீட்டு கருவி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இரத்த அணு கணக்கீட்டு கருவிகள் செயல்பாட்டில் உள்ளன.  தேவைப்படும் நபர்கள் தங்களது அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று இக்கருவியினை முழுமையாகப் பயன்படுத்தி கொள்ளலாம்.
 இந்த நிகழ்வின் போது வருவாய் கோட்டாட்சியர் பேபி,  இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.சகாய ஸ்டீபன்ராஜ் , துணை இயக்குநர் (காசநோய்) மரு.முனியரசு, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜவஹர்லால், மண்டல மருத்துவ அலுவலர் மரு.விநாயகமூர்த்தி, அரசு செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் சாமுண்டீஸ்வரி உள்பட அரசு அலுவலர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
...............

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து