சூளகிரி மற்றும் ஓசூர் பகுதியில் தூய்மையில்லாத நிறுவனங்களுக்கு ரூ.17லட்சத்து 55ஆயிரம் அபராதம்: கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      கிருஷ்ணகிரி
4

தமிழக அரசு உத்தரவுகிணங்க கிருஷ்ணகிரி மாவட்டம் அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூளகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் கலெக்டர் சி.கதிரவன் நேற்று (24.10.2017) ஆய்வு மேற்;கொண்டார்.

இவ்வாய்வின் போது சூளகிரியில் தனியார் நர்சரி பண்ணையில் பிளாஸ்டிக்கு கழிவுகளில் லார்வாக்கள் உள்ளதை கண்டறியப்பட்டு ரூ.5 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதே பகுதியில் தனியார் கிரானைட் நிறுவனத்தில் அதிகமாக கழிவுபொருட்கள் மற்றும் ஏடிஎஸ் கொசு உற்பத்தியாகும் வகையில் உள்ளதை கண்டறிந்த மாவட்ட கலெக்டர் அவர்கள் அந்நிறுவனத்திற்க்கு ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்க உத்தரவிட்டார்.

 

அபராதம் விதிப்பு

 தொடர்ந்து ஓசூர் - மோரனப்பள்ளி ஊராட்சி சிப்காட் - 2 பகுதியில் இயங்கி வரும் மயிலான் உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு பழைய இரும்பு டப்பாக்கள், பிளாஸ்டீக் கழிவுகள், டயர்கள் மற்றும் கழிவுகள் அதிகம் இருந்ததையும் கண்டறிந்த மாவட்ட கலெக்டர் அவர்கள் அவற்றை அகற்ற உத்தரவுவிட்டு அந்நிறுவனத்திற்க்கு ரூ.8 லட்சம் அபராதம் விதித்து நிறுவனம் சார்பாக புகைபோக்கி இயந்திரம் பெற்று அவ்வபோது தூய்மை பணிகளை செய்து கொள்ள மேண்டும் என உத்தரவிட்டார்.

அதே போல டிவிஎஸ் அக்ரோ புராடக்ட் நிறுவன வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ள இரு குட்டைகளில் ஆய்வு செய்து அதில் லார்வாக்கள் அதிகம் உள்ளதையடுத்து அதில் கம்பூசியா மீன்கள் விடவும், அவற்றை துய்மையாக வைத்து கொள்ளவும் உத்தரவிட்டதோடு ரூ. 3 லட்சம் அபராதமும், தொடர்ந்து பவுடர் தயாரிக்கும் நிறுவனத்தில் டயர் கழிவுகளில் லார்வாக்கள் அதிகம் உள்ளதை கண்டறிந்து அந்நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதமும் உத்தரவிட்டார். மேலும் ஐகோ ஜெட்பர்னர் நிறுவனத்தில் சரியாக பராமரிக்கபடாத நீர்தேக்க தொட்டியில் லார்வாக்கள் கண்டறியப்பட்டதையடுத்து ரூ.50 ஆயிரம் அபராதமும் , கே எல் என் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தில் இரும்பு கழிவு பொருள்கள் தூய்மையற்ற நிலையில் உள்ளதையடுத்து அந்நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்க உத்தரவுயிட்டதோடு நிறுவனங்களில் தூய்மையாகவும் சுத்தமாகவும் பராமரித்து கொள்ளவேண்டும். நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள தீ - தடுப்பு வாலிகளில் தண்ணீர் தேங்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

இந்நிகழ்சியின் போது ஓசூர் சார் கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா, துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.ப்ரியாராஜ் , சிப்காட் திட்ட அலுவலர் வெங்டாசலம் ,வட்டாச்சியர் பூசன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து