முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்: கண்காணிப்பு அலுவலர் ராஜேந்திரகுமார் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் ராஜேந்திரகுமார்,  தலைமையில், கலெக்டர்சந்தீப் நந்தூரி, முன்னிலையில்  நடைபெற்றது.கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர்  தெரிவித்ததாவது-

ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு நோய் பாதிப்புள்ள இடங்களில் துரிதமாக துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்ட இடங்களில் தொடர்ச்சியாக டெங்கு கொசு புழு ஒழிப்பு, டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் துப்புரவு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை 100 சதவீத ஈடுபாட்டுடன் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பாக துப்புரவு பணிகளை முழுவதுமாக முடித்திட வேண்டும். அரசு மற்றும் அரசு சார்பு கட்டடங்களில் இப்பணிகளை அந்தந்த அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் டெங்கு தடுப்பு தினமாக அனுசரித்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து தீவிரமாக டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்தார். கூட்டத்தில், கலெக்டர் தெரிவித்ததாவது-

கொசு ஒழிப்பு பணி

திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் சுகாதாரப் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டிகள், டிரம்கள் உள்ளிட்டவைகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். கூடுதல் பணியாளர்கள் தேவையெனில் நியமிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மாவட்டத்தில் நடைபெற்று வரும் மெகா துப்புரவு பணிகளை அதிகாலை நேரங்களில் மாவட்ட வருவாய் அலுவலர், மாநகராட்சி ஆணையாளர், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், ஊராட்சி செயலர்கள், சுகாதார ஆய்வாளர்கள்  ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், களப்பணியாளர்கள் முழுமையாக தங்களை டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்திட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கு கொசு ஒழிப்பு புகை மருந்து போதியளவில் கையிருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து 10 தினங்களுக்குள் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.பின்னர், திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் , கலெக்டர் ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்கள்.இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார்,இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, திருநெல்வேலி கோட்டாட்சியர் .மைதிலி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.சோமசுந்தரம், மாநகராட்சி ஆணையாளர் (பொ) நாராயணநாயர், சுகாதாரத்துறை அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து