புதுவை அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ பரபரப்பு பேட்டி

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      புதுச்சேரி

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் வருகின்ற 31-ந் தேதி நாடு முழுவதும்பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொண்டாடப்படுகின்றது. புதுவையில் அன்றைய தினம் தேச ஒற்றுமையை வலியுறுத்தி ஓட்டம் நடக்கின்றது. காலை 7 மணிக்கு அவ்வை திடலில் தொடங்கி காந்தி திடல் வரை தேச ஒற்றுமை ஓட்டம் நடைபெறும். இதில் பல்லாயிரககணக்கானோர் பங்கேற்கின்றனர். நவம்பர் 12-ந் தேதி ஊழலுக்கு எதிரான நடைபயணத்தை புதுவையில் நடத்த உள்ளோம்.  புதுவையை ஆண்ட காங்கிரஸ் ஆட்சியாளர்கள் 50 ஆண்டுகளில் ஊழலில் திளைத்துள்ளனர். அமைச்சர்களின் சொத்து பல மடங்கு உயர்ந்துள்ளது. ஊழலில் சம்பாதித்த அமைச்சர்களின் பட்டியலை வெளியிட உள்ளோம்.

ஊழல்

மின்துறையில் புதைவட கேபிள் பதிப்பதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையில் ஹைமாஸ் விளக்கு அமைப்பதில் ரூ.5 கோடி ஊழல் நடந்துள்ளது. இதுபோல பல துறையிலும் ஊழல் கொடி கட்டி பறக்கிறது. இந்த ஊழலுக்கு எதிராக நவம்பர் 12-ந் தேதி தவளக்குப்பத்தில் இருந்து சுதேசி மில் நோக்கியும், விpல்லியனூரில் இருந்து சுதேசி மில் நோக்கியும் நடைபயணம் நடத்துகிறோம். சுதேசி மில் அருகில் பொதுக்கூட்டமும் நடைபெறும். அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் தொடர்பாக சிபிஜ விசாரணை கோருவோம். நியமன எம்எல்ஏ தொடர்பாக சபாநாயகர் கோரிய அனைத்து விபரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை அரசுக்கு அனுப்பி உள்ளது. இதில் சட்ட ரீதியாகவும், ஜனநாயக முறையிலும் சபாநாயகர் முடிவு செய்வார் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது துணை தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச் செயலாளர்கள் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன் மற்றும் கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து