முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்வையாளர் பீலா ராஜேஷ் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணிகள் குறித்த கலந்தாலோசனைக்கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      தேனி
Image Unavailable

  தேனி -தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் ்தம் பணிகள்-2018 குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக்கூட்டம்  வாக்காளர் பட்டியல் பார்வையாளர்  .பீலா ராஜேஷ்,  தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  முன்னிலையில் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பான பணிகளும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்த, இடம்பெயர்;ந்த மற்றும் இரட்டைப்பதிவுடைய வாக்காளர்களை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் (டீடுயு)  மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களின் (டீடுழு) ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தி நீக்கம் செய்யப்பட வேண்டிய வாக்காளர்களின் பட்டியலினை தயார் செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 அதனடிப்படையில், மாவட்டத்தில் வருகின்ற 28.10.2017-ம் தேதியன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை 198.ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி மற்றும் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் ஆண்டிபட்டி பேரூராட்சிகுட்பட்ட பகுதிகளுக்கு ஆண்டிபட்டி, சிவசக்தி  ண மண்டபத்தில் 1 முதல் 216 வரையிலான பாகங்களுக்கும், கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்கள் மற்றும் காமயகவுண்டன்பட்டி, ஹைவேவிஸ் ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு கம்பம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 217 முதல் 253 வரையிலான பாகங்களுக்கும், 290 முதல் 300 வரையிலான பாகங்களுக்கும், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு கூடலூர், நகராட்சி அலுவலகத்தில் 254 முதல் 289 வரையிலான பாகங்களுக்கும், 199.பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளுக்கு பெரியகுளம், என்.எஸ்.என்  ண மண்டபத்தில் 1 முதல் 68 வரையிலான பாகங்களுக்கும், 109 முதல் 195 வரையிலான பாகங்களுக்கும், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு பெரியகுளம், நகராட்சி அலுவலகத்தில் 69 முதல் 108 வரையிலான பாகங்களுக்கும், தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் 204 முதல் 282 வரையிலான பாகங்களுக்கும், ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு என்.எஸ்.என்  ண மண்டபத்தில் 196 முதல் 203 வரையிலான பாகங்களுக்கான சிறப்பு கலந்தாலோசனை கூட்டங்கள் நடைபெறவுள்ளது.
 மேலும், 200.போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு போடிநாயக்கனூர் பாஸ்கரா  ண மண்டபத்தில் 1 முதல் 37 வரையிலான பாகங்களுக்கும், 108 முதல் 185 வரையிலான பாகங்களுக்கும், போடிநாயக்கனூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் 38 முதல் 107 வரையிலான பாகங்களுக்கும், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட (ஊஞ்சாம்பட்டி தவிர) பகுதிகளுக்கு தேனி, வசந்தம் மஹாலில் 199 முதல் 293 வரையிலான பாகங்களுக்கும், பொட்டிபுரம், சங்கராபுரம், பூலானந்தபுரம், புலிகுத்தி ஊராட்சிகள் மற்றும் மார்க்கையன்கோட்டை, குச்சனூர் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு குச்சனூர் மன்னர்  லைநாயக்கர் மஹாலில் 186 முதல் 198 வரையிலான பாகங்களுக்கும், 294 முதல் 309 வரையிலான பாகங்களுக்கும், 201.கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளுக்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் 1 முதல் 49 வரையிலான பாகங்களுக்கும், 86 முதல் 227 வரையிலான பாகங்களுக்கும், சின்னமனூர் நகராட்சிகுட்பட்ட பகுதிகளுக்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் 50 முதல் 85 வரையிலான பாகங்களுக்கும், கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு கம்பம் நகராட்சி அலுவலகத்தில் 228 முதல் 286 வரையிலான பாகங்களுக்கான சிறப்பு கலந்தாலோசனை கூட்டங்கள் நடைபெறவுள்ளது.
 எனவே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் சிறப்பு கலந்தாலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது பகுதிக்குட்பட்ட நீக்கல் இனங்களின் பட்டியலை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன்  சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கிடுமாறு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்  தி.பீலா ராஜேஷ்,  தெரிவித்தார்
 கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்   செ.பொன்னம்மாள்   வருவாய் கோட்டாட்சியர்கள்  சென்னியப்பன்    .இரா.ஆனந்தி   செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்   வட்டாட்சியர் (தேர்தல்)  சத்தியபாமா   அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து