நாகப்பட்டினம் மாவட்டத்தில்டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குறித்து ஆய்வுக்கூட்டம் : அரசு முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      நாகப்பட்டினம்
Nagai 2017 10 24

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உயர்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் சுனில் பாலிவால்,, தலைமையில், மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், முன்னிலையில் நடைபெற்றது.

 ஆய்வுக்கூட்டம்

 இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உயர்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் தெரிவித்ததாவது. "தமிழக அரசு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில், முழுவீச்சில் சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்பணியை விரைவுப்படுத்த வேண்டும். தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி தொடர்ந்து அனைத்து இடங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

 நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குப்பைகள் சேர விடாமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக பிளஸ்டிக் டீ கப், பாலிதின் பைகள் போன்றவைகளை அப்புறப்படுத்தாமல் இருந்தால் அதில் மழை நீர் சேர்ந்து ஏடீஸ் கொசு உற்பத்தியாக வழி உருவாகும். எனவே பிளஸ்டிக் டீ கப், பாலிதின் பைகள் போன்றவைகளை அப்புறப்படுத்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் புகை அடிப்பான்களை பயன்படுத்தி தினமும் கொசு மருந்து புகை அடிக்க வேண்டும். அரசு அலுவலகங்களை சுற்றி தேவையற்ற கலன்களை கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கான மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி குடிநீரில் தொடர்ந்து குளோரி;ன் கலக்க வேண்டும். பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், எவ்வாறு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு தனியாகக் கூட்டம் நடத்தி நீர் சேகரிப்பு இடங்களைக் கண்டறிந்து, அவற்றை உடனுக்குடன் அகற்றிட தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அறிவுறைகள் வழங்க வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு குறித்து பிரச்சாரம் செய்திட வேண்டும்.

பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் சிறிதும் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று இரத்தப் பரிசோதனையும், சிகிச்சையும் பெற்றுக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை குணப்படுத்தவும், தடுக்கவும் நிலவேம்பு குழநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு ஆகிய மருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் இப்பணியில் அரசு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். மேலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அதன்படி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை சேர்ந்த அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று ஆய்வு செய்ய வேண்டும் பள்ளியின் மேற்கூரையில் தண்ணீர் தேங்கியுள்ளதா,இலைதழைகள் சருகுகள் விழுந்து மழைநீர்; வெளியாகமல் உள்ளதா என்பதை பார்த்து அவ்வாறு மழைநீர்; இருந்தால் உடனடியாக அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இது போன்று பள்ளி வளாகத்திற்குள் மழைநீர்; இருந்தால் உடனடியாக வெளியேற்றிடவும், மருந்தடித்தல், பிளிச்சிங்பவுடர் தெளித்தல் போன்ற பணிகளை செய்து கொசுக்கள் உற்பத்தியாகமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். நியாவிலைக்கடைகளையும், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து ரேசன் பொருட்கள் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்தல் வேண்டும். இரண்டு மாத காலத்திற்கு தேவையான குடிமை பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, ஆரம்பசுகாதார நிலையங்களில் எந்நேரமும் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கின்ற வகையில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும். பணிமருத்துவர்கள், செவிலியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு தவறாமல் மருத்துவ மனையில் இருக்க வேண்டும். மழை, வெள்ளம் போன்றவைகளை எதிர்க்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்." என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை சார் கலெக்டர் செல்வி.பா.பிரியங்கா,, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கருணாகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சங்கர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மரு.செல்வகுமார், வருவாய் கோட்டாட்சியர் ம.கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து