பொன்னேரியில் காய்ச்சல் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      சென்னை
P neri

பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனை,சக்திநகர் மற்றும் தசரதன் நகர் ஆகிய பகுதிகளில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளின் தரம் பற்றி அவர் மருத்துவமனை முதன்மை அலுவலர் அனுரத்னாவிடம் கேட்டறிந்தார்.

 ஆய்வு

மேலும் நோயாளிகளிடம் நேரிடையாக விசாரித்து சிகிச்சையின் தன்மைகள் பற்றியும் கேட்டறிந்தார்.மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் பிரபாகரன்,கோட்டாட்ச்சியர் முத்துசாமி,வட்டாட்சியர் சுமதி,வட்டார வளர்ச்சி தனி அலுவலர் வாசுதேவன்,மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்,பொன்னேரி பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.இதே போன்று மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து